கோவை, ஏப். 18-கோவை மேட்டுப்பாளையம் சாலையில் அமைந்துள்ளது எம்.ஜி.ஆர். மொத்த மார்க்கெட். இங்குள்ள கடைகளுக்கு மாதம் ரூ. ஆயிரத்து 415 வாடகை நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மாநகராட்சி சில கடைகளுக்கு ரூ. 6 ஆயிரம் வரை வாடகை உயர்த்தப்பட்டது. இதைக் கண்டித்து வியாபாரிகள் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆணையாளர் வியாபாரிகளிடையே கடைகளை நேரில் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த பின்னர் வியாபாரிகள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Leave A Reply

%d bloggers like this: