டில்லி, ஏப். 18 –
புதுடில்லியில் உள்ள இந்திய விமானபடையின் தலைமை அலுவலகத்தில் பணியாளர் நலத்துறை அதி காரியாக பணிப்புரியும் ஏர் வைஸ் மார்ஷல் சுப்பிர மணிய சுகுமாருக்கு அதி விசிஸ்ட் சேவா பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.குடியரசுத் தலைவர் மாளிகையில் செவ்வா யன்று (ஏப். 17) நடைபெற்ற விழாவில் குடியரசுத் தலை வர் பிரதிபா பாட்டீல் இதனை அவருக்கு வழங்கினார்.காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தை சேர்ந்த சுப்பிரமணிய சுகுமார் மதுராந்தகத்திலேயே தனது பள்ளி படிப்பை முடித்தார். கோவையில் உள்ள ராணு வத்திற்கு சொந்தமான அம ராவதி நகர் சைனிக் பள்ளி யில் மேல்நிலை கல்வியை முடித்த அவர் 1972ம் ஆண்டு இந்திய விமானப்படையில் சேர்ந்தார். கடந்த 35 ஆண்டு களாக இப்படையில் பல் வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். 25 வகை யான போர் விமானங்களில் 4 ஆயிரம் மணி நேரம் வானில் பறந்துள்ள அவர் மிக் 23, மிக் 25, மிக் 27, மிக் 29 ரக போர் விமானங்க ளையும் திறமையாக இயக்கி இருக்கிறார்.

Leave A Reply

%d bloggers like this: