சென்னை, ஏப். 8-
ராணுவ ஆட்சி நடந்து வரும் மியான்மர் நாட்டில் ஆங் சான் சூ கியின் பெயர் ஜனநாயகச் சின்ன மாக விளங்குகிறது. ஜனநாயகத் திற்கான தேசிய அமைப்பு என்ற அவரது கட்சி மியான்மர் நாட்டில் நடைபெற்ற இடைத் தேர்தல்களில் பெருவாரி வெற்றியடைந்தது. ஆனால் 1960களில் அவர் தில்லி வானொலி நிலையத்தில் செய்திகள் வாசிப்பவராகப் பணியாற்றினார் என்று நடிகரும் எழுத்தாளருமான பாரதி மணி நினைவு கூர்ந்தார்.பிர்லா குழுமத்தில் அதிகாரியாகப் பணியாற்றிய பாரதி மணி (74) தில்லி வானொலி நிலையத்தில் பகுதி நேர நடிகராகவும் பணியாற்றினார். அவருடன் நடிகரும் செய்தி வாசிப்பாளருமான பூர் ணம் விஸ்வநாதனும் பணியாற்றினார்.1960ம் ஆண்டு ஆங் சான் சூ கி தில்லியிலுள்ள லேடி ஸ்ரீராம் கல்லூரியில் பயின்று வந்தார். அப் போது தில்லி வானொலி நிலையத்தில் பகுதி நேர செய்திகள் வாசிப்பவராகவும் பணியாற்றினார்.
அவர் ஆங்கிலச் செய்திகளை பர்மிய மொழியில் மொழிபெயர்த்து செய்திகளை வழங்கி வந்தார்.முதன்முதலாக அவரை தில்லி அகில இந்திய வானொலி நிலையத்தின் உணவகத்தில் விஸ்வநாத னோடு மெதுவடை சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது சந்தித்ததாக பாரதி மணி தெரிவித்தார்.அப்போது கையில் ஒரு கோப்பை காபியுடன் நான் உங்களுடன் சேர்ந்து கொள்ளலாமா? என்ற கேள்வியுடன் தோன்றிய ஒரு இளம்பெண் எங்களுடைய பதிலை எதிர்பாராமலேயே எங்கள் எதிரில் ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டார் என்று பாரதி மணி தெரிவித்தார். சரளமாக ஆங்கிலம் பேசிய அவருக்கு பூர்ணம் விஸ்வநாதனை ஏற்கெனவே தெரிந்திருந்தது. தில்லி வானொலி நிலைய நாடகங்களில் நடித்து வந்ததால் மாதத்திற்கு நான்கு அல்லது ஐந்து நாட்கள் அங்கு வருவது வழக்கம். அதன் பின்னர் அப்பெண்ணை வானொலி நிலைய உணவகத்தில் அடிக்கடி சந்திப்பது அல்லது பர்மியப் பிரிவில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் அவருக்கு ஜன்னல் மூலமாக வாழ்த்து தெரி விப்பது வழக்கம்.ஒருநாள் அவர் இந்தியாவில் தங்கியிருப்பதில் உள்ள பிரச்சனைகள் குறித்து என்னிடம் தெரிவித்தார். அப்போது பர்மியர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் அந்நிய நாட்டினர் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். என்னுடைய நண்பரொருவர் ஐஎப்எஸ் மூத்த அதிகாரி. அவர் வெளியுறவுத் துறையில் பணி புரிந்து கொண்டிருந்தார். நான் அவரைச் சென்று சந்திக்குமாறு கூறி என்னுடைய விசிட்டிங் கார்டையும் அவரிடம் கொடுத்தேன் என்று பாரதி மணி தெரிவித்தார்.அதன்பிறகு அதைப் பற்றி மறந்து விட்டேன்.
ஒருவாரம் கழித்து சிரித்த முகத்துடன் என்னிடம் வந்த ஆங் சான் சூகி தாம் இரண்டு வருடம் தங்குவதை என்னுடைய நண்பர் உறுதி செய்து விட்டார் என்று என்னிடம் தெரிவித்தார். அதற்காக எனக்கு மிகவும் நன்றி தெரிவித்தார்.அதன் பின்னர் பணிநிமித்தமாக அடிக்கடி பல நாடுகளுக்குச் சென்ற காரணத்தால் வானொலி நிலையத்திற்குப் போக முடியாத நிலைமை; ஆங் சான் சூகியுடனான தொடர்பு நின்று போனது. ஒருநாள் அவரை தொலைக்காட்சியில் பார்த்தேன். தொலைக்காட்சியில் 2001ம் ஆண்டு நோபல் பரிசு அவருக்கு அளிக்கப்பட்டதை ஒளிபரப்பிக் கொண்டிருந்தார்கள். அதன்பிறகு பூர்ணம் விஸ்வநாதனைச் சந்தித்த போது நினைவிருக்கிறதா என்று கேட்டேன். ஆனால் அவருக்கு நினைவில்லை. அதன் பின்னர் நான் தில்லி வானொலி நிலையத்தில் பணியாற்றியதை நினைவுபடுத்தி னேன். அப்போது நாம் நோபல் பரிசு வென்றவரோடு கைகுலுக்கியுள்ளோம் என்று பெருமைப்படலாம் என்று பதிலளித்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.