கோழிக்கோடு, ஏப். 8-
தலித் மற்றும் பழங்குடி யின மக்கள் தொகைக்கு ஏற்ப அவர்களது முன்னேற் றத்திற்கு உதவும் வகையில் 1980 ஆம் ஆண்டில் மத்தி யத்திட்டக்குழு உருவாக்கிய வழிகாட்டு நெறிமுறைகள் வெறும் காகிதத்தில் மட் டுமே இருப்பதை மார்க் சிஸ்ட் கட்சியின் 20வது மாநாடு கவலையுடன் பார்க்கிறது. பழங்குடியின ருக்கு 8.2 சதவிகிதமும், தலித்துகளுக்கு 16.2 சதவிகி தமும் நிதி ஒதுக்கீடு இருக்க வேண்டும். தற்போதைய பட்ஜெட்டிலும் சரி, இதற்கு முந்தைய பட்ஜெட்டுகளி லும் இதில் பாதிதான் ஒதுக் கப்பட்டிருக்கிறது. 2010 ஆம் ஆண்டிலிருந்து கணக் கெடுத்தால், பழங்குடியின ருக்கு 30 ஆயிரம் கோடி ரூபாயும், தலித்துகளுக்கு 72 ஆயிரத்து 751 கோடி ரூபா யும் ஒதுக்கப்பட்டிருக் கிறது.ஒருபுறம் தலித்துகள் மற்றும் பழங்குடியினர். மறுபுறத்தில் மற்ற பிரிவினர். இந்த இரண்டு பிரிவினருக்கும் இடையிலான இடை வெளியை நிரப்பவே இந்த சிறப்பு உட்கூறு துணைத் திட்டம் உருவாக்கப்பட் டது. தலித் மற்றும் பழங் குடியினரின் குடியிருப்பு களைப் பார்த்தால் எந்தவித வாய்ப்புகளும், வசதிகளும் இல்லாமல் அவர்கள் குடி யிருப்பதைப் பார்க்க முடி கிறது. இதுவரை இவர்களின் முன்னேற்றத்திற்கு ஒதுக் கப்பட்ட லட்சக்கணக் கான கோடி ரூபாய் வெட் டப்பட்டோ அல்லது திசை திருப்பி விடப்பட்டோ இவர்களுக்குக் கிடைக்கா மல் போனது.
அரசுத்துறை வேலை களுக்கான இட ஒதுக்கீடு அரசியல் சட்ட உரிமை யாக இருந்தும், சரியான முறையில் அது நடை முறைக்கு வரவில்லை. இத னால் தலித் மற்றும் பழங் குடியினருக்கான இடங்கள் நிரப்பப்படாமலேயே உள் ளன. அமைப்பு ரீதியான துறைகளில் தலித் மற்றும் பழங்குடியினரின் வேலை வாய்ப்புகள் குறைந்து கொண்டே வருகின்றன. அதேவேளையில், தொடர் ந்து உறுதிமொழிகளை அளித்து வந்தாலும், தனி யார் துறையில் தலித் மற் றும் பழங்குடியினருக்கு வேலைவாய்ப்பை உத்தர வாதப்படுத்துவதில் அரசு தோல்வியடைந்துள்ளது. தற்போது ஒப்பந்தப் பணி யாளர்களாகவும், தற்காலி கப் பணியாளர்களாகவும் அதுவும், இழிவான தொழில் களில் மட்டுமே இவர்கள் பணியாற்றிக் கொண்டிருக் கிறார்கள்.அரசின் சலுகைகளை அனுபவிக்கும் தனியார் துறை தனது சமூகப் பொறுப் புகளை நிறைவேற்றுவ தில்லை. தனியார் துறையில் போடப்படும் முதலீடுகளில் 80 சதவிகிதம், பொதுத் துறை வங்கிகளிலிருந்து தான் பெறப்படுகிறது. மேலும் நிலம், மின்சாரம், தண்ணீர், போக்குவரத்து, கட்டமைப்பு மற்றும் வரிச் சலுகைகள் உள்ளிட்டவைகள் அரசுகளால் தனியார் துறைக்கு வழங்கப்படுகிறது. 2012-13 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டின்படி, பெரு நிறுவனங்களுக்கு மத்திய அரசால் தரப்பட்ட வரிச் சலுகைகளின் அளவு 5 லட்சத்து 28 ஆயிரம் கோடி ரூபாயாகும். இந்த அள விற்கு மக்கள் பணத்தை எடுத்துக் கொண்டு, பெரும் லாபத்தை ஈட்டியபோதும் தலித், பழங்குடியினருக்கு ஒதுக்கீடு தர வேண்டிய பொறுப்பிலிருந்து தப்பித் துக் கொள்ள இந்தத் தனி யார் நிறுவனங்கள் முயற் சிக்கின்றன.
இதனால்,- துணைத் திட்டம் மற்றும் சிறப்பு உட் கூறு திட்டங்களை நிறைவேற்றுவதற்கான மத்தியத் திட்டக்குழு வழிகாட்டு நெறி முறைகளுக்கு சட்ட பூர்வமான ஏற்பாடு தரப்பட வேண்டும்.- குறிப்பிட்ட கால வரம்புக்குள் அரசு மற்றும் பொதுத் துறை பணியிடங் களை நிரப்புவதற்கு சட்டப்பூர்வ ஏற் பாடு அவசியம்.- தனியார் துறையில் இடஒதுக்கீட்டுக் கான சட்ட மசோதாஆகியவற்றை கட்சியின் 20வது மாநாடு கோருகிறது. தலித் மற்றும் பழங்குடி யினரின் நியாயமான இந்தக் கோரிக்கைகளுக்காக அனைத்து மட்டங்களிலும் ஒன்றுபட்ட போராட்டங் களை நடத்துமாறு கட்சி அறைகூவல் விடுக்கிறது.

Leave A Reply

%d bloggers like this: