திருச்சிராப்பள்ளி.ஏப்.3.
திருச்சி மாவட்ட அள விலான சமூக, பொருளா தார, சாதிவாரியான கணக் கெடுப்பு- 2011 குறித்த ஆலோ சனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட் டரங்கில் மாவட்ட ஆட்சி யர் ஜெயஸ்ரீ முரளிதரன் தலைமையில் திங்களன்று நடைபெற்றது. இதில் மாநகராட்சி அலுவலர்கள், நகராட்சி ஆணையர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், வட் டார வளர்ச்சி அலுவலர் கள் ஆகியோருக்கு பொரு ளாதார ரீதியிலான, சாதி வாரியான கணக்கெடுப்பு குறித்து பவர் பாயிண்ட் மூலம் பயிற்சி அளிக்கப் பட்டு, ஆலோசனை செய் யப்பட்டது. இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) பி.கனகரத்தினம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கோ.ராதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.