சிதம்பரம், ஏப்.1-
தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார் பில் சிதம்பரத்தில் ஆலோசனைக் கூட்டம் மாநிலத் தலைவர் பா. ஜான்சிராணி தலைமையில் நடைபெற் றது.இந்த ஆலோசனை கூட்டத்தில் சிதம்பரம் வட்டத் தில் உள்ள உடல் ஊனமுற்றவர்கள், பார்வையற் றோர்கள், காதுகேளாதவர், வாய் பேசாதவர், தொழு நோயால் பாதிக்கப்ப்பட்டு குணமடைந்தவர்,உயர வளர்ச்சி தடைபெற்றவர்கள்,மனவளர்ச்சி குன்றியவர்கள்,மாற்று திறனாளிகளின் நலனுக்கு பாடுபடுவோர் அனைவரும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.அலோசனை கூட்டத்தில் சிதம்பரம் சட்டப் பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன், மாவட்டத் தலைவர் ராதாகிருஷ்ணன், மாவட்டச் செயலாளர் உதயகுமார், மாவட்டபொருளாளர் குமார் ஆகியோர் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளி களுக்கானஅடையாள அட்டை, அரசினால் அளிக்கப்படும் மாத உதவித் தொகை, உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் மற்றும் உரிமைகளை பெறுவது பற்றி பேசினார்கள்.

Leave A Reply

%d bloggers like this: