கிருஷ்ணகிரி, ஏப். 1-
கிருஷ்ணகிரி மாவட் டத்தில் பரப்பளவில் மிக பெரியதாக உள்ள தளி ஊராட்சி ஒன்றியத்தில் அஞ் செட்டியும், பர்கூர் ஒன்றி யத்தில் உள்ள போச்சம்பள் ளியும் புதிய ஊராட்சி ஒன்றி யங்களாக அமைக்க வேண் டும் என்று ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்க மாவட்ட மாநாட்டில் தீர் மானம் நிறைவேற்றப்பட் டுள்ளது.கிருஷ்ணகிரியில் தமிழ் நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாவட்ட மாநாடு நடந்தது. மாவட்டத் தலைவர் டி. மோகிந்திர பிரசாத் தலை மை தாங்கினார். மாநில துணைத் தலைவர் பா. ரவி, மாவ ட்டச் செயலாளர் மா.சையத் பயாஸ்அகமது, மாவட்ட ஆட்சியரின் நேர் முக உதவி யாளர் கோபால கிருஷ்ணன், சத்துணவு துறை உதவி இயக்குநர் கி. பட்டா பிரா மன் , தமிழ்நாடு அரசு ஊழி யர் சங்க மாவட்ட த்தலைவர் ஆர். நாகராஜன், வருவாய்த் துறை அலுவலர் சங்க மாவட் டத் தலைவர் பி. விஜயராகவன் உள்ளிட் டோர் பேசினர். வேலைப் பளுவால் மன உளைச்சலுக்கு உள்ளா கும் நிலையை போக்க நீண் டகாலமாக நிரப்பப்படா மல் உள்ள இளநிலை உதவி யாளர் மற்றும் உதவியாளர் போன்ற பணியிடங்களை விரைவில் நிரப்ப வேண்டும், ஆய்வுக் கூட்டங்களை இரவு நேரங்களிலும் , விடு முறை நாட்களிலும் நடத்து வதை மாவட்ட நிர்வாகம் கைவிட வேண்டும், கணினி உதவியார் காலிப்பணி யிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். பெண் ஊழியர்களுக்கு தனி ஓய்வ றையும் அலுவலக பணியா ளர்கள் மதிய உணவுக்கான தனி அறையும் மாவட்ட ஆட்சியரகத்தில் ஒதுக்கித் தர வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.புதிய மாவட்டத் தலை வராக எஸ்.வி. ராஜா, செய லாளராக மா. சையத் பயாஸ் அஹமத், பொருளாளராக எம். சுப்பிரமணி, உள் ளிட்ட 13 நிர்வாகிகளும் , மாநில செயற்குழு உறுப் பினர் வி. முரளியும் தேர்வு செய்யப்பட்டனர்.

Leave A Reply