திருவண்ணாமலை, ஏப்.1
திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரியில் இந்தியாவின் பாரம்பரியச் சுற்றுலா என்ற தலைப்பில் தேசிய அளவிலான கருத் தரங்கு நடைபெற்றது.1966 ல் துவங்கப்பட்டது திருவண்ணாமலை கலைக் கல்லுரி இக்கல்லூரி வர லாற்றில் முதல்முறையாக இந்த தேசியக் கருத்தரங்கு நடைபெறுகிறது. திருவண் ணாமலை அரசு கலைக்கல் லூரி முதல்வர் இராசசேக ரன் தலைமை வகித்தார். முனைவர் ஆர். தனிஸ்லாஸ் ரா. குணசேகரன் மற்றும் து. தங்கரா ஆகியோர் ஒருங் கிணைத்தனர். மார்ச் 30, 31 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த தேசிய அளவிலான கருத்தரங்கில் வரலாறு, ஆன்மீகம், சமு தாய பொருளாதார மற் றும் சுற்றுச்சுழல் துறை களில் சுற்றுலா மேம்பாடு குறித்து இந்திய அளவிலான பல் கலைக்கழக கல்லூரிப் பேரா சிரியர்கள் மற்றும் ஆய் வாளர்கள் கலந்து கொண்டு கட்டுரைகள் வழங் கினர். கருத்தரங்கை, தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை இயக்குநர் டாக்டர் ரவீந்திரன் தொடங்கி வைத் தார். சென்னைப் பல்கலைக் கழகத்தின் இந்தியவரலாற் றுத் துறைத்தலைவர் பேரா. கோ. வெங்கட்ராமன் சிறப் புரையாற்றினார். திருவள் ளூவர் பல்கலைக் கழக சிண்டிகேட் உறுப்பினர் முனைவர் டாக்டர் சுப்ர மணியம், டாக்டர் கீதாகண் ணம்மாள், டாக்டர். கௌத மன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு, பாண்டிச்சேரி, ஆந்திரா, கர் நாடகா மற்றும் கேரளா விலிருந்து பேராசிரியர்கள் கலந்து கொண்டு 112 ஆய்வு கட்டுரைகளை சமர்பித் தனர்.இது போன்ற கருத்தரங் குகள் மறைந்து கொண்டி ருக்கும் பாரம்பரிய சுற்று லாத் தளங்களை மீண்டும் வெளிக்கொணர்வதற்கும் வளர்ந்து கொண்டு இருக் கிற சுற்றுலா மையங்கள் மேலும் அதிக வளர்ச்சி அடைவதற்கும் பயன்படும் என்று ஆய்வாளர்கள் கூறி னர்.திருவண்ணாமலைக்கு மேற்கத்தியர்கள் தியானம், யோகா, இந்துசமய வேதங் களைக் கற்கவும், மன அமை தியைத் தேடியும் விரும்பி வருகிறார்கள். எனவே இந்த தேசியக் கருத்தரங்கு இந்திய நாட்டின் பாரம்பரிய சுற் றுலா செய்திகளையும், அவற்றை எவ்வாறு நாம் பாதுகாக்க வேண்டும் என் பதையும் அறிந்துகொள்ள உதவும் என்றும் அவர்கள் கூறினர். இதுபோன்ற தேசியக் கருத்தரங்குகள் மீண்டும் நமது வரலாற்றை நினைவூட்டும் வகையில் அமையும் என்பதில் ஐய மில்லை என பேராசிரியர் கள் கூறினர்.

Leave A Reply