வேலூர், எப். 1-
வேலூர் மாவட்டம் காட் பாடியில் உள்ள தமிழ்நாடு வெடிமருந்து தொழில் நிறு வனம் (டெல்) நஷ்டத்தை கட்டுப்படுத்த தொழிலாளர் களுக்கு விருப்ப ஓய்வு அளிக் கப்படுவதற்கு ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள் ளனர்.டெல் நிறுவனத்தைகடந்த 1986ம் ஆண்டு முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் தொடங் கிவைத்தார். ஆரம்பத்தில் டெட்டனேட்டர், எம்எம் ஏஎன், பீடென்,எம்எஸ் சன, டிஎப், மற்றும் ஸ்லரி போன்ற வெடிமருந்துகள் தயாரிக்கப்பட்டன. ஆயிரத் திற்கு அதிகமான ஊழியர் கள் பணியாற்றிவந்த இந் நிறுவனம் அதிக வருவாய் ஈட்டி தந்தது. தமிழக அர சின் பொதுத்துறை சிறுவன மான ‘டெல்‘ கடந்த 2002ம் ஆண்டு என்.ஜி (நைட்ரோ கிளிசர்) என்ற வெடிமருந்தை தயாரிக்க கூடாது என மத் திய அரசு தடை விதித்தது. இதனால் உற்பத்தி குறைந்து நஷ்டத்தில் இயங்க தொடங் கியது.நஷ்டத்தை ஈடுகட்ட குறுகிய காலத்தில் அதிக உற் பத்தி, தனியார் நிறுவனங் களைவிட விலை குறைவான வெடிமருந்து உற்பத்தி போன்ற பல திட்டங்களை செயல்படுத்த டெல் நிர்வா கம் தயாரானது. இதற்கு தொழிலாளர் களிடமிருந்தும் முழு ஒத்துழைப்பு அளிக்கப் பட்டது. இருந்தா லும் முழு மையாக ஈடுகட்ட முடிய வில்லை என கூறி ஆட் குறைப்பே வழிஎன்ற தேவை யில்லாத முடிவுக்கு நிர்வா கம் சென்றது.டெல் நிறவனத்தில் தற் போது 428 தொழிலாளர்கள் 88 அலுவலக பணியாளர் கள், 31 நிர்வாக பணியாளர் கள் என மொத்தம் 547 பேர் பணியாற்றுகின்றனர். 2012 மார்ச் 31க்குள் விருப்ப ஓய்வுக்கு செல்பவர்கள் தெரி விக்கலாம் என அறிவிப்பு பலகையில் வெளியிட்டுள் ளனர்.இது குறித்து சிஐடியு தொழிற்சங்க பொறுப்பா ளர் கூறியதாவது:ஆரம்பத்தில் நல்ல லாபத்தில் இயங்கி வந்த டெல் நிறுவனம் அதிகாரி களின் தவறான கொள்கைக ளால் பெரும் நஷ்டத்தில் செல்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் 200க்கும் அதிகமான தொழி லாளர்களை விரும்ப ஓய் வில் அனுப்பினர். அதற்குள் மற் றொரு அறிவிப்பை வெளி யிட்டு தொழிலாளர்களை அதிர்ச்சி அடையசெய்துய் யனர். எவ்வளவு ஆர்டர் வந் தாலும் அதை தொழி லாளர்கள் குறித்த நேரத்தில் செய்து கொடுக்க தயாராக இருக்கிறோம் என நிர்வா கத்திற்கு எடுத்துக் கூறியும் இத்தகைய முடிவை எடுத் திருப்பது தொழிலாளர்கள் மத்தியில் வருத்தத்தையும் ஏமாற்றத்தையும் அளிக் கிறது. தமிழகமுதல்வர் உடனே தலையிட்டு இப்பிரச்சனை க்கு முற்றுப்புள்ளி வைக்க வேண் டும் .இவ்வாறு அவர் கூறினார்.விருப்ப ஓய்வு குறித்து டெல் பொதுமேலாளர் தாயுமானவரிடம் கேட்ட போது இது வழக்கமான ஒன்றுதான். விருப்பமுள் ளவர்கள் ஓய்வு பெறலாம். இதில் தவறு ஒன்றும் இல்லை என்று கூறினார்.

Leave A Reply

%d bloggers like this: