திருவண்ணாமலை, ஏப். 1
திருவண்ணாமலை ராமலிங்கனார் முதல் தெரு வில் வசிப்பவர் மீனாட்சி சுந் தரம் (74). இவரது மனைவி கமலா (70). மகன் மற்றும் மகள் ஆகியோர் சனிக்கிழ மையன்றுவழக்கம்போல வேலைக்கு சென்றுவிட்ட னர். பகல் 1 மணியளவில் மின் தடை ஏற்பட்டது. கதவை திறந்துவைத்துவிட்டு வாச லில் கமலா உட்கார்ந்திருந் தார். மீனாட்சி சுந்தரம் வீட் டில் படுத்திருந்தார். அப்போது வீட்டுக்கு வந்த 15 வயது மதிக்கத்தக்க 2 சிறுவர்கள் வாசலில் உட்கார்ந்திருந்த கமலா விடம் முகவரி கேட்பது போல நடித்து திடீரென வாயை பொத்தி அவரை கத்தியால் வெட்டி 7 சவரன் செயின், 5 சவரன் தாலி சரடு ஆகியவற்றை பறித்து சென் றனர். இதையடுத்து நகை களை பறிமுதல் செய்த போலீ சார் 2 மாணவர்களை யும் கைது செய்தனர்.

Leave A Reply