சிதம்பரம், ஏப். 1-
சிதம்பரம் அண்ணா மலை பல்கலையில் பெண் களுக்கு தனியாக கலைக்கல் லூரி தொடங்க வேண்டும் என்று சிதம்பரம் சட்டப் பேரவை உறுப்பினர் கே.பால கிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.சிதம்பரம் அருகே உள்ள சி.முட்லூர் அரசு கலைக்கல்லூரியில் கல்லூரி வளாகத்தில் மாணவர்களுக்கு மடிக்கணினி மற்றும் கல் லூரி விளையாட்டு போட்டி யில் வெற்றி பெற்ற மாண வர்களுக்கு பரிசு வழங்கும் விழா கல்லூரியின் முதல்வர் வாசுதேவன் தலைமையில் நடைபெற்றது.விழாவில் சிதம்பரம் சட் டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு விளையாட்டுப் போட்டியில் வெற்றிப் பெற்ற மாணவ மாணவிக ளுக்கு பரிசுகளை வழங்கிப் பேசுகையில், அரசு கலைக் கல்லூரியில் படித்த மாணவர் கள் தான் தற்போது உயர் பதவியில் உள்ளனர் என்றார். சிதம்பரத்தில் மாண விகளுக்கு கென்று தனியாக கலைக்கல்லூரி இல்லை என்பதை குறிப்பிட்ட அவர், பெண்கள் கல்லூரி அமைக்க வேண்டும் என்று தமிழக அரசின் உயர் கல்வி துறை அமைச்சரை சந்தித்து கோரிக்கை விடுத்ததாகவும் அவரும் நடவடிக்கை எடுப் பதாக உறுதியளித்திருப் பதாகவும் கூறினார்.இதனிடையே கடந்த 31 தேதி அண்ணாமலை பல் கலைக் கழக செனட் கூட்டத் தில் அண்ணாமலை பல்கலை யில் பெண்கள் கலைக்கல் லூரி அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததா கவும் பாலகிருஷ்ணன் தெரி வித்தார்.இந்த நிகழ்ச்சியில் புவன கிரி சட்ட மன்ற உறுப்பினர் செல்விராமஜெயம், நகர் மன்ற தலைவர் நிர்மலா, இந்திய மாணவர் சங்க மாவட்ட தலைவர் கோ பால் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply