ஓசூர், ஏப். 1-
தருமபுரி மாவட்ட மத் திய கூட்டுறவு வங்கியின் 40வது கிளை ஓசூர் நகராட்சி நேரு நகரில் துவங்கப்பட்டு உள்ளது.மாவட்ட ஆட்சித்தலை வர் சி.என். மகnஸ்வரன் தலைமையில் நகராட்சி நிர் வாகம் மற்றும் ஊரக வளர்ச் சித்துறை அமைச்சர் கே.பி. முனுசாமி புதிய கிளையை துவக்கி வைத்து சிறப்புரை யாற்றினார். இணை பதிவா ளர் ஆனந்தி, மாவட்ட வரு வாய் அலு வலர் பிரகாசம், சட்டமன்ற உறுப்பினர்கள் கோபிநாத், மனோரஞ்சிதம், கிருஷ்ணமூர்த்தி, தளி ராமச் சந்திரன், மாவட்ட ஊராட்சி தலைவர் அசோக்குமார், அர்ஜூனன்,ஆகியோர் வாழ்த் திப்பேசினார்கள். மண்டல சரக மாவட்ட பதிவாளர் கள் கலந்து கொண்டனர். ரூ. 4.8 கோடி மதிப்பில் 14 ட்ராக் டர்கள் 18 தொடக்க வேளா ண்மை கூட்டுறவு சங்கங் களுக்கு வழங்கப்பட்டது.

Leave A Reply