வேலூர், எப். 1-
வேலூர் கிங்ஸ்டன் பொறியில் கல்லூரியில் வேலை வாய்ப்புக்கான தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பணி நியமன ஆணையை அவர்களின் பெற்றோர்களின் கையால் வழங்கும் விழா வரும் திங்களன்று (ஏப்.1) நடை பெறுகிறது.இது குறித்து கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரி தலை வர் டி.எம் கதிர் ஆனந்த் செய்தியாளர்களிடம் கூறிய தாவது:கிங்ஸ்டன் பொறியில் கல்லூரி தொடங்கி 4 ஆண்டு கள் முடியப்போகிறது கல்லூரியில் சேரும்போதே, மாண வர்களின் வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் கொடுத்து இருந்தோம். அதை நிறைவேற்ற உள்ளோம்.காக்னிசென்ட் , விப்பேரா, எச் சி எல், உள்ளிட்ட 15 முன்னணி நிறுவனங்கள் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாமை நடத்தின. 264 மாணவர்களில் 260 மாணவர் களுக்கு நல்ல சம்பளத்துடன் வேலை கிடைத்துள்ளது. 98 விழுக்காடு மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்படுகிறது.ஆண்டுதோறும் ஆண்டுவிழா நடத்துவோம். இந்த ஆண்டு முதல் பணி நியமன ஆணை வழங்கும் விழா நடைபெறும். பணி நியமன ஆணையை மாணவர் களின் பெற்றோர்களே வழங்குவது தான் இவ்விழாவின் சிறப்பு. இவ்விழா வரும் 2 ம் தேதி நடைபெறும்.இந்த ஆண்டு கல்லூரியில் எம்.இ பாடத்திட்டம் புதிய தாக தொடங்கப்படும். பி.இ கம்யூட்டர் சயின்ஸ், என்ஜினி யரிங் பாடப் பிரிவுகளில் மேலும் 60 மாணவர்களை சேர்க்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Leave A Reply