திருவண்ணாமலை, ஏப் 1
திருவண்ணாமலை எஸ்.கே.பி. (ஐ.டி.) தகவல் தொழில்நுட்ப கல்லூரியில் கூடல்-12 என்ற ஆண்டு விழா சனிக்கிழமையன்று மாலை நடைபெற்றது.விழாவுக்கு கல்லூரி தலைவர் கு.கருணாநிதி தலைமை தாங்கினார். கல்லூரி செயலாளர் ஆர்.குப்பு சாமி, கல்லூரி இயக்குநர் ஆர்.செல்வம் ஆகியோர் முன் னிலை வகிக்க கல்லூரி முதல்வர் செந்தில்குமார் ஆண்ட றிக்கை வாசித்தார். மாணவ மாணவிகள் சார்பில் பல் வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவில் கல் லூரி தலைவர் கருணாநிதி பேசுகையில், எஸ்கேபி பொறியியல் கல்லூரி 3 ஆண்டுகளுக்கு முன்பு தொடங் கப்பட்டாலும் உள் கட்டமைப்பு வசதிகள் முழுமையாக உள்ளது. திறமையான பேராசிரியர்களும் இருப்பதால் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பிக் கப்பட்ட பொறியில் கல்லூரிகளில் எஸ்கேபி தொழில் நுட்ப கல்லூரி இப்போது முதலிடத்தை பெற்றுள்ளது. மாணவர்களும் படிப்பில் சாதனை படைத்து வருகின்ற னர். மாணவர்களுக்கு தேவையான அனைத்து அடிப் படை வசதிகளும் நிர்வாகம் சார்பில செய்து கொடுக்கப் படுகிறது. இவர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம் மூலம் வேலைகிடைக்கவும் கல்லூரி நிர்வாகம் ஏற்பாடு செய் கிறது. பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற படிப்பில் சாதனை படைத்த மாணவ மாணவிகளுக்கு பரிசு களையும் சான்றுகளையும் நடிகர் ஜெய் வழங்கினார்.

Leave A Reply