சென்னை, மார்ச் 31 -தமிழக அரசு தெருவுக்கு தெரு மதுக்கடைகளை திறந்துள்ளதால் 25விழுக் காடு மாணவர்கள் போதைக்கு அடிமையாகி உள்ளனர் என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் ஆர்.வேல்முரு கன் கூறினார். இச்சங்கத்தின் ஆயிரம் விளக்கு பகுதி, திருவேங்கட புரம், நமச்சிவாயபுரம் ஆகிய கிளைகள் சார்பில் மாவீரன் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோரின் நினைவு தினம் மற்றும் ஊழல்- போதை எதிர்ப்பு தின பொதுக்கூட் டம் வியாழனன்று (மார்ச் 29) சூளைமேடு நெடுஞ் சாலையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் கலந்து கொண்டு சங்கத்தின் மாநிலச் செயலாளர் ஆர். வேல்முரு கன் பேசியது வருமாறு:தமிழகத்தில் 800 குடும்ப அட்டைகளுக்கு ஒரு ரேஷன் கடை இருக்க வேண்டும். ஆனால், சென்னையில் 2 ஆயிரத்து 500க்கும் அதிக மான குடும்ப அட்டை களோடு ரேசன் கடைகள் இயங்குகின்றன.கிராமப்புறங்களில் 100 குடிசை வீடுகள் இருந் தாலே அரசு ஒரு டாஸ்மாக் கடையை திறக்கிறது. இதன் விளைவு தமிழகத்தில் 11 வயது முதல் 18 வயதுடைய மாணவர்களில் 24.6 விழுக் காட்டினர் மது உள்ளிட்ட போதை பொருட்களுக்கு அடிமையாகி உள்ளனர் என்று ஒரு ஆய்வு தெரிவிக் கிறது. தெருவுக்குத் தெரு டாஸ்மாக் கடைகளை திறந்து மக்களை குடிகாரர் களாக மாற்றி வருகிற அரசு இந்த ஆண்டு 20ஆயிரம் கோடி ரூபாய்க்கு மது விற்க இலக்கு நிர்ணயித்துள்ளது.நவோதயா பள்ளியில் ஒரு மாணவனுக்கு 36 ஆயி ரம் ரூபாயும், கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 13 ஆயிரம் ரூபாயும் செலவு செய்யும் அரசு, அரசுப் பள் ளிகளில் பயிலும் மாண வனுக்கு 600 ரூபாய்தான் செலவு செய்கிறது. கல்வி முறையில் உள்ள வேறுபாடு களை களைய இலக்கு நிர் ணயிக்காமல் மதுக்கடை களுக்கு இலக்கு நிர்ணயிப் பது கேவலமானது.இவ்வாறு அவர் கூறினார்.சிபிஎம் தென் சென்னை மாவட்டச் செயலாளர் ஏ.பாக்கியம் பேசுகையில், ராணுவத்தில் தடவாளப் பொருட்கள், வாகனங்கள், விமானங் கள், சவப்பெட்டி வாங்குவதில் நடைபெறும் ஊழல் வெட்ககரமானது; தேசத்தின் பாதுகாப்பு கேள்விக் குறியாக்கப்பட்டுள் ளது. ஊழல் செய்வதில் பிஜேபி, காங்கிரஸ் கட்சி கள் ஒன்றுக்கு ஒன்று சளைத் தவை அல்ல. இவர்கள் காற்று, மணல், நிலக்கரி, எரி வாயு என இயற்கை வளங் களையும் விட்டுவைக்க வில்லை என்றார்.சென்னை நகரில் நில வும் மின்வெட்டால், மெழுகு வர்த்திக்கு நாள்தோறும் 18 ரூபாய் செலவு செய்ய வேண்டி உள்ளது. தெருவுக்கு தெரு குப்பைகள் மலை போல் குவிந்து கிடக்கின் றன. சாலைகள் குண்டும் குழியுமாக காட்சி அளிக் கின்றன. இந்த சூழ்நிலை யில் மக்களை ஏமாற்ற முதலமைச்சர் ‘தொலை நோக்குத் திட்டம் 2023’ என அறிவித்துள்ளது என்றும் அவர் கூறினார்.சங்கத்தின் பகுதிப் பொருளாளர் எம். ஆனந் தன் தலைமையில் நடை பெற்ற இக்கூட்டத்தில் சங்கத்தின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ச. லெனின், பொருளாளர் எம்.தாமு, துணைத் தலை வர் சி. விஜயானந்த், பொதுப் பள்ளிக்கான மாநில மேடை பொதுச் செயலா ளர் பு.பா. பிரின்ஸ் கஜேந்திர பாபு, மு. மணிமுடி உள்ளிட் டோர் பேசினர்.

Leave A Reply