அம்பத்தூர், மார்ச்31-அம்பத்தூர் அருகே உள்ள அயப்பாக்கம் காயத்ரி நகரில் வசிப்பவர் ரவிவர்மா (28). இவர் சிறுசேரியில் உள்ள சாப்ட்வேர் நிறுவ னத்தில் பொறியாளராக பணி புரிகிறார். இவரது மனைவி பிரியாமகாலட் சுமி.வழக்கம் போல் ரவிவர் மா வெள்ளிக்கிழமை காலை வேலைக்கு சென்று விட் டார். பிரியாமகாலட்சுமி வீட்டை பூட்டிவிட்டு அரு கில் உள்ள உறவினர் வீட் டுக்குச் சென்றார். பின்னர் மாலையில் வீடு திரும்பிய மகாலட்சுமி வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந் தார். உள்ளே சென்று பார்த்த போது வீட்டிலிருந்த 4 சவரன் நகை கொள்ளை யடிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.இதுகுறித்து ரவிவர்மா திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித் தார். திருமுல்லை வாயல் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Leave A Reply