திருவள்ளுர், மார்ச்31-திருவள்ளுர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அரு கிலுள்ள பொதிகரமேடு கிராமத்தில் ஆர். பக்தவச் சலம் என்பவருக்கு சொந்த மான விளை நிலத்திற்கு அருகாமையில் எஸ்.எஸ்.டி என்ற பெயரில் தனியாருக்கு சொந்தமான செங்கல் சேம்பர் இயங்கி வருகிறது. இந்த செங்கல் சேம்பருக்கு தேவையான சவுடு மண் பட் டா நிலங்களில் அரசு அனு மதியில்லாமல் இந்திரங்கள் மூலம் எடுக்கப்படுகிறது. தற் போது 30 அடி ஆழத்திற்கும் அதிகமாக பள்ளம் ஏற்பட் டுள்ளது. மேலும், அரசுக்கு சொந்தமான நிலத்திலும் விதிமுறைகளை மீறி சவுடு மண் எடுத்து வருகின்றனர். இதனால் நிலச்சரிவு ஏற் பட்டுள்ளது. மழைக் கலாங் களில் விளைநிலங்கள் நீரோ டையாக ளாக மாறிவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நிலத்தடி நீரும் குறைந்து குடி தண்ணீரும் கிடைக் காமல் மக் கள் அவதிப்படும் நிலை ஏற்படும் சூழல் உள்ளது. ஆகவே, பொது மக்கள் விவ சாயிகளின் நலனை கருத்தில் கொண்டு அரசு உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று பொன்னேரிவருவாய் கோட் டாட்சியரிடம் கிராம மக்கள் மனு அளித்துள்ளனர்.

Leave A Reply