வேலூர், மார்ச் 31-வேலூர் மாநகராட்சி 2012-13ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை நிதிக்குழுத் தலைவர் இள வரசி தாக்கல் செய்தார். இதனை மேயர் கார்த்தியா யினி வாசித்தார்.2012-13ம் நிதியாண்டில் மொத்த வரவு ரூ.124 கோடியே 96 லட்சம் எனவும், செலவு ரூ.125 கோடியே 84 லட்சம் எனவும் மதிப்பீடு செய்யப் பட்டுள்ளது. இதில் நிகரப் பற்றாக்குறை ரூ.88 லட்சத்து 13ஆயிரம். இதை தொழில் வரி, காலி மனை வரிவிதிப்பு மற்றும் அரசு கூடுதல் நிதி மூலம் சரி செய்யப்படும் என மேயர் கூறினார்.நடப்பாண்டில் 54 புதிய கழிப்பிடங்கள் கட்டப் படும். வேலூரை குப்பை இல்லா நகரமாக மாற்ற அரசு மானியத்துடன் கூடுதல் வாகனங்கள், குப்பைத் தொட்டிகள் வாங்க முடி யும் என்றார்.மாநகரில் 7 இடங்களை தேர்வு செய்து ஒருங்கிணைந்த வீட்டு வசதி மற்றும் குடி சைப் பகுதி மேம்பாடு திட் டத்தின்கீழ் ரூ.109 கோடியே 3 லட்சத்து 65ஆயிரம் மதிப் பில் மேம்படுத்தப்படும் என் றார்.10,12 ஆம் வகுப்பு படிக் கும் மாநகராட்சிப் பள்ளி மாணவர்களில் முதல் மாணவ- மாணவிகளுக்கு ஊக்கத் தொகை வழங்கப் படும். புதிய பேருந்து நிலை யம் நவீன மயமாக்கப்படும். மாநகராட்சிப் பள்ளிகளில் ஆங்கிலக் கல்வி தொடங் கப்படும். அனைத்துப் பள் ளிக் கட்டிடங்களில் சூரிய ஒளி மூலம் மின் உற்பத்தி செய்யப்படும். பழைய மாந கராட்சி அலுவலகத்தில் வணிக வளாகம் அமைக்கப் படும். போக்குவரத்து மேலா ண்மை திட்டம் செயல்ப டுத்தப்படும். மாநகரில் மேம் பாலங்கள், சுரங்கப்பாதை கள் அமைக்க ஆராயப்ப டும் என்பது உள்ளிட்ட பல் வேறு திட்டங்களை அறிவித்தார். இதில் துணை மேயர் தர் மலிங்கம், ஆணையர் அஜ் மல்கான், பொறியாளர் தேவகுமார், மாமன்ற உறுப் பினர்கள் பங்கேற்றனர்.

Leave A Reply