சென்னை, மார்ச்-31கொண்டித்தோப்பு காவல் குடியிருப்பில் வசிப் பவர் அழகானந்தம் (50). இவரது மனைவி சரஸ்வதி. இவர்களுக்கு 2 மகள்கள் மற்றும் 1 மகன் உள்ளனர். அழகானந்தம் முத்தியால் பேட்டை காவல் நிலையத் தில் சிறப்பு உதவி ஆய் வாளராக பணி புரிந்து வந் தார். இந்நிலையில் வெள் ளிக்கிழமை பணியில் இருந்த போது அழகானந்தத்திற்கு வயிற்று வலி ஏற்பட்டுள் ளது. இதற்காக சிகிச்சை பெற சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு சென் றுள்ளார்.மருத்துவமனையில் உள்ள 1வது பிளாக் வளாகம் அருகே நடந்து சென்ற போது அழகானந்தம் திடீ ரென மயங்கி விழுந்துள் ளார். இதைக்கண்ட மருத்து வமனை ஊழியர்கள் அவரை மீட்டு சிகிச்சைக் காக அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்து விட்டதாக தெரிவித்துள் ளனர்.மருத்துவமனையில் நடந்து வந்த போது திடீ ரென ஏற்பட்ட மாரடைப் பால் அவர் இறந்திருக் கலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். மருத்து வமனை வளாகத்திலேயே உதவி ஆய்வாளர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave A Reply