செங்கல்பட்டு, மார்ச் 31-தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் மகளிர் தின கருத்தரங்கம் செங்கல்பட்டில் நடைபெற் றது. சங்கத்தின் மாவட்டத் தலை வர் பி. பன்னீர்செல் வம் தலைமை தாங்கினார். பி. திலகம் வரவேற்றார். மாநில மகளிர் துணைக்குழு உறுப்பினர் பி. கியூரி, மாதர் சங்க பகுதி செயலாளர் ஆர். ராஜலட்சுமி, இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் தென் மண்டலஇணை செயலா ளர் எம். கிரிஜா ஆகியோர் கருத்துரை வழங்கினர். கே. பூங்குழலி நன்றி கூறினார்.
ஆட்டோவை திருடும் கும்பல் கைது
அம்பத்தூர், மார்ச்31-
அம்பத்தூரை அடுத்த திருமுல்லைவாயல் செந்தில் நகர் தனபால் தெருவில் வசிப்பவர் லட்சுமண குமார் (25). இவர் அதே பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருகிறார். புதன் கிழமை இரவு வீட்டு முன் நிறுத்தியிருந்த அவரது ஆட் டோ காணவில்லை.இதுகுறித்து லட்சுமண குமார் திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். திருமுல்லைவாயல் காவல் துறையினர் வழக்கு பதிந்து விசாரித்து ஜெகன் (43), தியாகராஜன் (31), ஆறுமுகம் (31) ஆகியோரை காவல் கைது செய்து அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இவர்களிடமிருந்து மேலும் இரண்டு ஆட்டோக்களையும் பறிமுதல் செய்துள் ளனர்.

Leave A Reply