ஓசூர், மார்ச் 31-கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வட்டம் கோனேரிப் பள்ளியில் பெருமாள் மணிமேகலை பாலி டெக்னிக் பொறியியல் கல்லூரியில் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கமும், மதுரை அரவிந்தன் மருத்துவமனையும் இணைந்து மாபெரும் இலவச கண்சிகிச்சை முகாமை நடத்தியது.இம்முகாமிற்கு கல்லூரியின் செயலாளர் பி. குமார் தலைமை தாங்கினார். சமூக சேவை, சமுதாய சேவைத் துறை ஒருங்கிணைப்பாளர் சதீஷ்குமார், கல்லூரியின் ஐடிஐ இயக்குநர் என். சுதாகரன், திட்ட இயக்குநர் சேது ராம், பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் பாலசுப் பிரமணியன், ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த முகாமில் 328 பேர் பரிசோதிக்கப்பட்டு ,53 பேர் இலவச கண்புரை அறுவை சிகிச்சைக்கு தேர்ந்தெடுக் கப்பட்டு மதுரைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

Leave A Reply