இந்தியன் வெல்ஸ் பிஎன்பி பரிபாஸ் ஓபன் டென்னிஸ் போட்டிகளின் நான்காவது சுற்றில் பெடரர், நாடல், அசரென்கா போன்ற முன்னிலை டென்னிஸ் வீரர்கள் நுழைந்துள்ளனர்.ரோஜர் பெடரர், அதிரடி சர்வீஸ் வீரர் மிலோஸ் ராவோனிக்குக்கு பாடம் சொல்லிக்கொடுத்தார் என்று கூறலாம். முதல்செட்டை மிலோஸ் 7-6 (4) என வென்றார். ஆனால் அதற்குப்பின் பெடரர் களத்தை ஆக்கிரமித்துக்கொண்டார். பெடரர் 6-7, 6-2, 6-4 என வென்றார்.
உலகத்தரவரிசையில் இரண்டாம் இடத்தில் உள்ள நாடல் சக நாட்டவரான கிரானோல்லர்ஸ் என்பவரை 6-1, 6-4 என வென்றார். கால் இறுதியில் அலெக்சாண்டர் டோல்கோ போலோவை எதிர்த்து நாடல் ஆடுகிறார்.மகளிரில் அசரென்கோ 6-3, 6-1 என்ற செட்டுகளில் ஜூலியா ஜார்ஜசை வீழ்த்தினார். கால் இறுதியில் அசரென்கோ எதிர்கொள்ளவுள்ள ரட்வன்ஸ்கா 3-6, 6-4, 3-0 என்ற செட்டுகளில் அமெரிக்கர் ஜேனி ஹாம்ப்டனை தோற்கடித்தார். மூன்றாவது செட்டில் ஜேனி போட்டியிலிருந்து விலகிக்கொண்டார்.அனா இவானோவிக் உலகின் முன்னாள் முதன்மை வீராங்கனையை 6-3, 6-2 எனத் தோற்கடித்தார்.
எந்தவொரு கிராண்ட் ஸ்லாம் போட்டியையும் வெல்லாமல் ஏடிபி போட்டிகளை மட்டும் வென்று உலகின் முதன்மை இடத்தைப்பிடித்த வோஸ்னியாக்கி நான்காம் இடத்துக்கு கீழே இறங்கி விடுவார். மரியா சரபோவாவும் கால் இறுதியில் நுழைந்துள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.