தில்லி விசார்ட்ஸ் அணி தொடர்ந்து நான்காவது ஆட்டத்தைத்தோற்றுள்ளது. இதனால் அரை இறுதி வாய்ப்பை இழக்கும் நெருக்கடியில் உள்ளது. புதுதில்லியில் நடந்த போட்டியில் சண்டிகர் காமெட்ஸ் அணி 1-0 என்ற கோலில் தில்லி அணியை வென்றது.இரு அணிகளும் சொதப்பின. ரசிகர்களை விரட்டும் வகையில் ஆட்டம் இருந்தது. இறுதி ஊதலுக்கு ஆறு நிமிடங்கள் இருக்கும்போது கிடைத்த பெனால்டிகார்னரில் குர்ஜிந்தர் சிங் சண்டிகரின் வெற்றிக்கோலை அடித்தார். தில்லி அணிக்குக் கிடைத்த நிச்சயமான கோல் வாய்ப்புகளை சண்டிகர் கோல் கீப்பர் ஹர்ஜோத் சிங் அபாரமாகத் தடுத்தார்.மும்பையில் நடந்த மற்றொரு உலகத்தொடர் ஹாக்கி போட்டியில் பஞ்சாப் சிங்கங்கள் அணி 3-2 என்ற கோல்களில் மும்பை மெரைன்ஸ் அணியைத் தோற்கடித்தது.
பஞ்சாப் அணி தொடக்கம் முதலே தாக்குதலில் இறங்கியது. மும்பை அணி அழுத்தங்களை தடுத்து, எதிர்த்தாக்குதலில் இறங்கும் பாணியை இங்கும் தொடர்ந்தது. பஞ்சாப் அணி முதல் நிமிடத்திலேயே கோல் போட்டது. மும்பை கோல் வாயிலில் ஏற்பட்ட குளறுபடியைப் பயன்படுத்தி சண்டிகரின் பாகிஸ்தான் வீரர் தாரிக் அஜீஸ் கோல் அடித்தார். 12ம் நிமிடத்தில் மும்பையின் ஜோகா சிங் கோலை சமன் செய்தார்.கடைசி 12 நிமிடங்களில் தீபக் தாக்குர் இரண்டு கோல்களை அடித்தார். அவர் 58ம் நிமிடத்திலும் 63ம் நிமிடத்திலும் கோல் அடித்தார். மெரைன்ஸ் அணியின் இரண்டாம் கோலை யுவ்ராஜ் வால்மீகி ஆட்டத்தின் இறுதி நிமிடங்களில் அடித்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.