ஐசிசி இருபது 20 உலகக்போப்பை தகுதி போட்டிகளில் அயர்லாந்து அதிர்ச்சி தோல்வி அடைந்தது. அயர்லாந்தை நமீபியா நான்கு ஓட்டங்களில் தோற்கடித்தது. அயர்லாந்து 20 ஓவர்களில் ஒன்பது விக்கெட் இழப்புக்கு 156 ஓட்டங்கள் எடுத்தது. நமீபியா எட்டு விக்கெட் இழப்புக்கு 160 ஓட்டங்கள் எடுத்திருந்தது. ஆட்ட நாயகன் லூயிஸ் வான் டெர் வெஸ்துயிஸன் 24 ஓட்டங்களுடன் இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.பெர்முடாவை வென்ற டென்மார்க், நேபாளத்திடம் தோற்றது. ஆப்கானிஸ்தான் பாப்புவா நியூகினியாவையும், நெதர்லாந்து கனடாவையும் இத்தாலி ஓமனையும், உகாண்டா யு.எஸ்.சையும் தோற்கடித்தன.

Leave a Reply

You must be logged in to post a comment.