உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களுக்கு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல் காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இருகட்சிகளுக்குமே மகிழ்ச்சியளிப்பதாக அமையவில்லை என்பது தான் உண்மை. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குகிற நிலை யில், இந்த ஐந்து மாநிலங்களுக்கு நடைபெற்ற தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கரு தப்பட்டது.
அதிலும் குறிப்பாக உ.பி. மாநில தேர் தலில் வெற்றிபெற காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சி கள் கடுமையாக முயற்சி எடுத்தன. காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி இந்த தேர்தலை தன்னுடைய தனிப்பட்ட கௌரவப் பிரச்சனையாகவே கருதிக்கொண்டார். பாஜக வும் இழந்த தன்னுடைய தளத்தை பிடிக்க தலைகீழாக நின்றது.இந்நிலையில் உ.பி. மாநில தேர்தல் காங் கிரஸ், பாஜக மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி களுக்கு அதிர்ச்சியளிப்பதாக அமைந்திருந்தது. மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி ஆட்சியை மக்கள் நிராகரித்துள்ளனர். ஊழல், ஆடம்பரம், சந்தர்ப்பவாதம், சாதி அரசி யல் ஆகியவை மாயாவதியின் தோல்விக்கு பிரதான காரணங்களாக அமைந்துள்ளன.
காங்கிரஸ் அல்லாத பாஜக அல்லாத மதச் சார்பற்ற கட்சிகளை தேசிய அளவில் ஒருங் கிணைக்க உ.பி.யில் சமாஜ்வாதி கட்சிக்கு கிடைத்துள்ள வெற்றி உதவும்.உ.பி.யில் காங்கிரஸ் கட்சி கூட்டணிக்கு 38 இடங்களே கிடைத்துள்ளன. பஞ்சாபில் அந்த கட்சி 46 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றுள் ளது. உத்தரகாண்ட்டில் பாஜகவைவிட ஒரு இடத்தில் மட்டுமே கூடுதலாக வெற்றிபெற்றுள் ளது.
கோவாவில் அந்த கட்சி ஆட்சியை இழந் துள்ளது. மணிப்பூரில் மட்டுமே காங்கிரஸ் ஆட் சியை தக்க வைத்துக்கொள்ள முடிந்துள்ளது. ஒட்டுமொத்தத்தில் இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவு என்றே கூற முடியும்.காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற் போக்கு கூட்டணி அரசின் கொள்கைகளால் தொடர்ச்சியாக உயர்ந்த விலைவாசி, ஊழல் மற்றும் மக்கள் விரோத நடவடிக்கைகளால் அதிருப்தி அடைந்துள்ள மக்கள் காங்கிரசை நிராகரித்துள்ளனர். காங்கிரசுக்கு மாற்றாக தன்னை முன்னிறுத் திக் கொள்ளும் பாஜகவுக்கும் இந்தத் தேர்தல் முடிவு மகிழ்ச்சியளிப்பதாக இல்லை. உ.பி.யில் அந்தக் கட்சி 47 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
உத்தரகாண்ட்டில் ஆட்சியிலிருந்த நிலையில், காங்கிரஸ் கட்சியை விட பின்தங்கி உள்ளது. பஞ்சாபில் குறைவான இடங்களையே பெற்றுள்ள அந்தக் கட்சி, கோவாவில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளது.காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகள் தேசிய அளவில் ஒன்றுக்கொன்று மாற்றாக அமைய முடியாது என்பதை இந்தத் தேர்தல் முடிவு உணர்த்தியுள்ளது. இந்த இரு கட்சிகளும் பல விசயங்களில் ஒரே மாதிரியான கொள்கை யையே கொண்டுள்ளன. தேர்தல் நடைபெற்ற இந்த மாநிலங்கள் இடதுசாரி கட்சிகள் வலுவாக உள்ள மாநிலங் கள் அல்ல.
அதே நேரத்தில் தேசிய அளவில் மக்கள் போராட்டங்களை மேலும் மேலும் நடத்தி, இயக்கத்தை வலுப்படுத்த வேண்டி யுள்ளது என்பதையும் இந்த தேர்தல் முடிவு உணர்த்துகிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.