அடுத்த நூற்றாண்டுக்குள் உலக மொழிகளில் 90 விழுக்காடு மொழிகள் அழிந்துவிடும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக மொழியியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஜெர்மனியில் நடைபெற்ற ஆய்வு முகாமில்தான் இந்தக் கருத்து வந்துள்ளது. அதில் பேசிய ஆய்வாளர்கள், 95 விழுக்காடு மொழிகள் வெறும் ஆறு விழுக்காடு மக்களால்தான் பேசப்படுகிறது. இதில் பெரும்பாலான மொழிகள் அடிப்படைக் கட்டமைப்பையே இழக்கும் நிலையில்தான் உள்ளன. இணையதளங்களின் வளர்ச்சியில் இந்த மொழிகள் காணாமல் போய்விடும் அபாயம் உள்ளது என்று கூறியுள்ளனர். இந்த ஆய்வாளர்கள் தரும் புள்ளிவிபரங்களின்படி, உலகிலேயே சீன மாண்டரின் மொழியைப் பேசுபவர்கள்தான் அதிகமாக இருக்கிறார்கள். 90 கோடிப் பேர் அதைப் பேசுகிறார்கள். அதற்கு அடுத்த இடத்தில் 40 கோடிப் பேர் ஸ்பானிய மொழியையும், ஆங்கிலத்தை 30 கோடிப் பேரும் பேசுகிறார்கள். உலகமயமாதல் பாதிப்பு மொழிகளையும் விட்டுவைக்கவில்லை என்கிறார்கள் ஆய்வாளர்கள். உலக அளவில் சுமார் 7 ஆயிரம் மொழிகள் தற்போது பேசப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலான மொழிகளுக்கு எழுத்து வடிவம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

%d bloggers like this: