மதுரை,மார்ச்.6-
அதிமுக ஆட்சியேற்ற 9 மாத காலத்தில் 12 லாக்கப் படு கொலைகள் நடைபெற்றுள் ளன. காவல்துறையின் கடிவா ளம் முதல்வர் ஜெயலலிதா வசம் தான் உள்ளதா என்ற கேள்வி இதனால் எழுந்துள் ளது என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மதுரை தெற்குச்சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் இரா.அண்ணா துரை கேள்வி எழுப்பியுள் ளார்.மதுரை நகைப்பட்டறை தொழிலாளி சரவணக்குமார் லாக்கப் படுகொலை செய்யப் பட்டதைக் கண்டித்து மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்தில் இரா.அண்ணா துரை எம்.எல்.ஏ. பேசிய தாவது:-
தமிழக முதல்வராக ஜெயல லிதா பதவியேற்ற போது ‘காவல்துறை சுதந்திரமாக செயல்படும். அதன் செயல் பாட்டில் யாரும் தலையிடக் கூடாது’ என்று கூறினார். ஆனால், காவல்துறையின் கடிவாளம் அதன் பொறுப்பு வகிக்கும் காவல்துறை அமைச்சரான முதலமைச் சர் ஜெயலலிதா வசம்தான் உள்ளதா என்ற கேள்வியை தமிழகத்தில் நடைபெறும் காவல்நிலைய மரணங்கள் எழுப்ப வைக்கின்றன.அதிமுக அரசு பொறுப் பேற்றவுடன் நடைபெற்ற முதல் காவல்நிலைய மர ணம் மதுரை ஊமச்சிகுளம் காவல்நிலையத்தில் நடை பெற்ற மார்க்கண்டேன் மரணமாகும்.
அதனைத் தொடர்ந்து ஜுலை 3 ம் தேதி சென்னை கே.கே.நகர் காவல்நிலையத்தில் சரஸ் வதி என்ற பெண், ஜுலை 7 ம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகர் ணத்தில் சின்னப்பா, ஜுலை 18 ம் தேதி காரைக்குடியில் பழனிக்குமார், ஆகஸ்ட் 11 ம் தேதி கோபியில் சலீம், ஆகஸ்ட் 30ம் தேதி பல்ல டம் ரமேஷ், செப்டம்பர் 3ம் தேதி குப்புச்சாமி, அக் டோபர் 1ம் தேதி வடபழனி யில் முத்து, மதுரை கரி மேட்டில் சுரேஷ், விருது நகர் பாரபத் தியில் பாலமுரு கன், தற்போது மதுரை தில கர் திடல் காவல்நிலையத் தில் சரவணக்குமார் என அதிமுக பொறுப்பேற்ற 9 மாதங்களில் 12 பேர் கொல் லப்பட்டுள்ளனர்.
இந்தியா வில் கடந்த 5 ஆண்டுகளில் காவல்நிலைய மரணங் களின் எண்ணிக்கை அதிக ரித்து வருகிறது. தமிழகம் இதில் 5 வது இடத்தில் உள் ளது. காவல்நிலைய மர ணங்கள்மட்டுமின்றி என் கவுண்ட்டர் என்ற பெயரில் பலர் கொல்லப்படுகின் றனர். காவல்துறை நடத்தும் மனித உரிமை மீறலை அனு மதிக்க முடியாது. காவல் நிலையத்தில் ஒருவர் எப்படி நடத்தப்பட வேண்டும் என்ற உச்சநீதிமன்ற வழி காட்டு நெறிமுறைகள் தொடர்ந்து தமிழகத்தில் மீறப்பட்டு வருகிறது. விழுப் புரம் மாவட்டம் திருக் கோஷ்டியூர் காவல்நிலை யத்தில் 4 பழங்குடி இனத் தைச் சேர்ந்த பெண்கள் பாலியல் பலாத்காரம் செய் யப்பட்ட கொடூரச்செய லுக்கு உயர்நீதிமன்றம் கடும் கண்டனத்தைத் தெரிவித் துள்ளது.
ஆகவே, தமிழகத் தில் நடைபெற்ற காவல் நிலைய மரணங்கள் குறித்து தமிழக அரசு உரிய விசா ரணை நடத்தி, சம்பந்தப் பட்ட காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு இரா.அண்ணாதுரை எம்.எல்.ஏ கூறினார்.

Leave A Reply

%d bloggers like this: