உத்தரகாண்ட்டில் கடும் இழுபறி
உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்க காங்கிரஸ், பாஜக இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.இங்கு மொத்தமுள்ள 70 இடங் களில் ஆளும் பாஜக 32 இடங்களி லும் காங்கிரஸ் 31 இடங்களிலும் முன்னணியில் உள்ளன.பகுஜன் சமாஜ் கட்சி 3 இடங் களில் முன்னணியில் உள்ளது. சுயேச் சைகளும் சிறு கட்சிகளும் 4 இடங்க ளில் முன்னணியில் உள்ளன. இங்கு ஆட்சியைப் பிடிக்க 35 இடங்கள் தேவை.இதனால் இந்த மாநிலத்தில் மீண் டும் ஆட்சியைப் பிடிக்க முயலும் பாஜகவுக்கும் காங்கிரசுக்கும் மாயா வதி மற்றும் சிறிய கட்சிகள், சுயேச்சைகளின் உதவி தேவை. இதனால் இந்த மாநிலத்தில் ஆட்சி அமைப்பதில் பெரும் இழுபறி ஏற்பட வாய்ப்புள்ளது.உத்தரகாண்டில் கடந்த சட்ட மன்றத் தேர்தலோடு ஒப்பிடுகையில் ஆளும் பாஜக 3 இடங்களை இழந் துள்ளது. காங்கிரஸ் கூடுதலாக 10 இடங்களில் வென்றுள்ளது. பகுஜன் சமாஜ் 5 இடங்களை இழந்துள்ளது.
பஞ்சாபில் அகாலிதளம்
பாஜக கூட்டணி வெற்றிபஞ்சாபில் ஆளும் அகாலிதளம்-பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கவுள்ளது. இந்த மாநிலத்தில் மொத்தமுள்ள 117 இடங்களில் அகாலி தளம்-பாஜக கூட்டணி 68 இடங்களி லும் காங்கிரஸ் 46 இடங்களிலும் முன்னணியில் உள்ளன. மற்ற கட்சிகள் 3 இடங்களில் வென்றுள்ளன.இந்த மாநிலத்தில் மீண்டும் ஆட்சி யமைக்க 58 இடங்களே தேவை. அகாலி தளம்-பாஜக கூட்டணி 68 இடங்களில் வென்று, மீண்டும் ஆட்சியமைக்கிறது.இந்த மாநிலத்தில் கடந்த சட்டமன் றத் தேர்தலோடு ஒப்பிடுகையில், அகாலிதளம்-பாஜக கூட்டணி கடந்த தேர்த லில் பெற்ற இடங்களையே மீண்டும் பெற்றுள்ளது. காங்கிரஸ் 2 இடங்களை கூடுதலாகப் பிடித்துள்ளது.
மணிப்பூரில் காங்கிரஸ்
மணிப்பூர் மாநிலத்தில் மொத்த முள்ள 60 தொகுதிகளில் ஆளும் காங்கிரஸ் 44 இடங்களில் வென்று, 3வது முறையாக தொடர்ந்து ஆட்சியைப் பிடித்துள்ளது.இதனால் இந்த மாநிலத்தை காங்கிரஸ் தக்க வைத்துள்ளது.திரிணாமுல் காங்கிரஸ் 7 இடங் களிலும், மற்ற கட்சிகளும் சுயேச் சைகளும் 10 இடங்களிலும் வென் றுள்ளன.பாஜக ஏதுமில்லாமல் படு தோல்வி அடைந்துள்ளது.கடந்த தேர்தலோடு ஒப்பிடுகை யில் காங்கிரசுக்கு 14 இடங்களும், திரிணாமுல் காங்கிரசுக்கு 7 இடங் களும் கூடுதலாகக் கிடைத்துள்ளன.
கோவாவில் பாஜக ஆட்சி
கோவாவில் காங்கிரஸை தோற்கடித்து, பாஜக ஆட்சியைப் பிடித்துள்ளது.இந்த மாநிலத்தில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 26 இடங்களில் பாஜக வென்றுள்ளது. ஆளும் காங்கிரஸ் வெறும் 9 இடங்களில் தான் வென்றுள்ளது.மற்ற கட்சிகள் 5 இடங்களில் வென்றுள்ளன.கடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில், இந்த மாநிலத்தில் பாஜக 10 இடங் களை கூடுதலாகப் பிடித்துள்ளது. காங்கிரஸ் 10 இடங்களை இழந்துள்ளது.

Leave A Reply

%d bloggers like this: