சென்னை, மார்ச் 6-
சென்னையில் தனியார் பெரும் மருத்துவமனைகளான அப் பல்லோ, மலர், மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் போன்றவற்றில் பணியாற் றும் செவிலியர்கள் ஆயிரக்கணக் கானோர் 5வது நாளாக நியாய மான கோரிக்கைகளை முன் வைத்து வேலைநிறுத்தப் போராட் டத்தை நடத்தி வருகின்றனர்.கோரிக்கைகளை செவிமடுப் பதற்கு பதிலாக இந்தப்போராட்டத் தை ஒடுக்க முயற்சிக்கும் மருத்துவ மனை நிர்வாகங்களுக்கு இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) எச்சரிக்கை விடுத்துள்ளது.இதுதொடர்பாக, சிஐடியு மாநில பொதுச் செயலாளர் அ.சவுந்தரரா சன் எம்எல்ஏ விடுத்துள்ள அறிக் கை வருமாறு:-சென்னையில் அப்பல்லோ, மலர், மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் போன்ற தனியார் மருத்துவமனை களில் செவிலியர்களின் வேலை நிறுத்தப்போராட்டம் 5 நாட்களாக தொடர்கிறது.இந்தப்போராட்டத்தை எப்படி ஒடுக்குவது என்பதில் தான் மருத் துவமனை நிர்வாகங்கள் அக்கறை செலுத்துகின்றன. செவிலியர்களை தங்கும் விடுதியில் இருந்து வெளி யேற்றுவது, விடுதிகளில் தண்ணீர் வசதியை துண்டிப்பது, மின்சாரத் தை துண்டிப்பது போன்ற மனிதாபி மானமற்ற முறைகளைக் கையா ளுகின்றனர். நியாயமான போராட் டத்தை ஒடுக்கும் முயற்சிகளை தொழிற்சங்க இயக்கம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்காது.தனியார் மருத்துவமனை செவி லியர்கள் மற்றும் இதர ஊழியர் களின் ஊதியம் மிகவும் குறைவா கவே உள்ளது. அரசு மருத்துவம னைகளில் உள்ள செவிலியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு இணை யான ஊதியத்தை தனியார் மருத்து வமனை செவிலியர்களுக்கும் ஊழி யர்களுக்கும் வழங்க வேண்டும். இதை அரசு உறுதிப்படுத்த வேண்டும்.ரூ.15000 மாத ஊதியம் வேண் டும் என்ற செவிலியர்களின் கோரிக்கையின் மீது அரசு உடனே தலையிட்டுபேசி தீர்வு காண வேண் டும். அவர்களின் சான்றிதழ்களை வாங்கி வைத்துக்கொள்வது, கொத் தடிமை முறையில் உத்தரவாதப்பத் திரம் எழுதி வாங்குவது போன்றவற் றை அரசு தடை செய்ய வேண்டும்.அரசு மருத்துவமனை ஊதியத் தைக் கணக்கில் கொண்டு தனியார் மருத்துவமனை செவிலியர்களுக் கும், ஊழியர்களுக்கும் தொழில் வாரியாக குறைந்தபட்ச ஊதியம் அறிவிக்கை செய்ய வேண்டும்.தனியார் மருத்துவமனை களைப்போலவே தனியார் பள்ளிக் கூடங்கள், தனியார் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், விரி வுரையாளர்கள் மற்றும் ஊழியர்க ளின் ஊதியமும் மிகவும் குறைவா கவே உள்ளது.எனவே, தமிழக அரசும், முதல் வரும் இந்தக்கொடிய சுரண்டல்க ளுக்கு முடிவுகட்ட உடனே நடவடிக் கை எடுக்க வேண்டும் என வலி யுறுத்துகிறேன்.தனியார் மருத்துவமனை செவி லியர் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில், அவர் களின் கோரிக்கைகள் மீது உரிய பேச்சுவார்த்தைகளை நடத்தி சுமூக தீர்வு காண தமிழக அரசு முன்வர வேண்டும். மேலும் போராடும் செவிலியர் மற்றும் ஊழியர்கள் மீது ஏவப்படும் பழிவாங்கல் நடவடிக்கை களை தடுத்து நிறுத்திட தமிழக முதல்வரின் தலையீட்டைக் கோரு கிறேன்.தனியார் மருத்துவமனை செவி லியர் மற்றும் ஊழியர்களின் நியாய மான போராட்டத்தை ஆதரித்து, ஆதரவு இயக்கங்களை சிஐடியு மாநிலம் முழுவதும் மேற்கொள் ளும் என்பதை தெரிவித்துக் கொள் கிறேன்.

Leave a Reply

You must be logged in to post a comment.