திருச்சிராப்பள்ளி, மார்ச் 6-
மாசிமகம் பெருவிழா இன்று (புதனன்று) கொண் டாடப்படுகிறது. தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நட்சத்திரம் மகம் நட்சத்திரம் என்பதால், அவர் புதனன்று ஸ்ரீரங்கம் கோயிலில் வழிபாடு செய்ய உள்ளார்.இதற்காக அவர் சென் னையிலிருந்து புதனன்று மாலை சிறப்பு விமானத் தில் திருச்சி வருகிறார். மாலை 5.30மணிக்கு திருச்சி விமானம் நிலை யம் வந்தடையும் அவர், அங்கிருந்து காரில் ஸ்ரீரங் கம் செல்கிறார். அங்கு கோயிலில் தரிசனம் செய்த பின் இரவு 7மணிஅளவில் சென்னை புறப்பட்டு செல் கிறார். முதல்வர் வருகை யை முன்னிட்டு பாது காப்பு ஏற்பாடுகளை போலீசார் செய்து வரு கின்றனர்.

Leave A Reply