மைக்ரோசாப்ட் வேர்ட் தொகுப்பில் அதிக பக்கங்கள் கொண்ட டாக்குமெண்ட்டில் பணிபுரியும்போது ஓரிடத்தில் எடிட் செய்யும் முன்பாக வேறு பக்கத்தில் உள்ள தகவலைப் பார்த்துவிட்டு திரும்பவும் வந்து அந்த இடத்தில் சரி செய்ய வேண்டும் எனும்போது பக்கங்களை நகர்த்தித் தேடுவது சற்றுக் கடினமான வேலை. இதற்கு ஒரு குறுக்கு வழி உள்ளது. அதாவது ளுழஐகுகூ+ கு5 கீகளை அழுத்தலாம். இது கடைசியாக கர்சர் இருந்த மூன்று இடங்களைக் காட்டும். மற்றொரு வழி நமக்குத் தெரிந்ததுதான். எடிட் செய்ய வேண்டிய இடத்தில் கர்சரை வைத்துவிட்டு ஸ்குரோல் பாரை மட்டும் நகர்த்தி பக்கங்களைப் படிப்பது. பிறகு எடிட் செய்யும்போது ஏதேனும் ஒரு எழுத்து அல்லது ஸ்பேஸ் பார் கீயை அழுத்தினால் கடைசியாக கர்சர் இருந்த பக்கம் காட்டப்படும்.

Leave A Reply

%d bloggers like this: