பூந்தமல்லி, மார்ச், 6 -பூந்தமல்லியை அடுத்த குன்றத்தூர் சின்னத் தெரு வில் வசித்து வருபவர் ஹரி. செவ்வாயன்று காலை இவரது வீட்டு வாசல் முன்பு நீண்ட நேரமாக குழந்தை அழும் சத்தம் கேட்டது. அங்கு சென்று பார்த்த போது தொப்புள் கொடியுடன் பிறந்து 2 நாட்களே ஆன பெண் குழந்தை துணியில் சுற்றப்பட்ட நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச் சியடைந்தார். இதனால் அப்பகுதி பெரும் பரபரப்பு ஏற்பட்டது.இதுகுறித்து குன்றத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அங்கு வந்த காவல் துறையினர் குழந் தையை மீட்டு எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவ மனையில் அனுமதித்துள்ள னர். மேலும் காவல் துறையி னர் குழந்தையை வீசிச் சென்றது யார் என விசா ரித்து வருகிறார்கள்.

Leave A Reply

%d bloggers like this: