விண்டோஸ் கணினியில் உள்ள மென்பொருள்களை இயக்கும்போதும், ஃபோல்டர்களைத் திறக்கும்போதும் மேல் பகுதியில் மினிமைஸ், மேக்சிமைஸ் மற்றும் குளோஸ் பட்டன்களைப் பயன்படுத்துவோம். இந்த பட்டன்களுடன் கூடுதலாக மினிமைஸ் டூ ட்ரே, டிரான்ஸ்பிரண்ட் விண்டோ, விண்டோ டூ பாக்ஸ், ஆல்வேஸ் ஆன் டாப் என்ற அனைத்து விண்டோக்களுக்கும் முதன்மையான விண்டோவாக மாற்றும் செயல்பாடு, மெனு இல்லாத முழுமையான விண்டோவாக மாற்ற என்பது உள்ளிட்ட 10 விதமான பட்டன்களைத் தரக்கூடிய எக்ஸ்ட்ரா பட்டன்ஸ் என்ற மென்பொருள் வெளியிடப்பட்டுள்ளது. இது விண்டோஸ் 98, எக்ஸ்பி, விண்டோஸ் 7 உள்ளிட்ட அனைத்து இயங்குதளங்களிலும் இயங்கும் என்று கூறப்படுகிறது. 1.3 எம்பி அளவே உள்ள இம்மென்பொருள் முற்றிலும் இலவசமாகும்.இம்மென்பொருளை பதிவிறக்கம் செய்யும் இணைய முகவரி: hவவயீ://றறற.ஒவசயரெவவடிளே.உடிஅ/கடைநள/நஓவசயக்ஷரவவடிளே.நஒந

Leave a Reply

You must be logged in to post a comment.