விஜய் ஹசாரே 50 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் தில்லியும் பஞ்சாப் அணியும் வெற்றி பெற்றன. தில்லி அணி எட்டு விக்கெட்டுகளில் அசாமையும், பஞ்சாப் இரண்டு விக்கெட்டுகளில் மகாராஷ்டிராவையும் தோற்கடித்தன.தில்லியின் பந்து வீச்சு அபாரமாக இருந்தது. நீண்ட ஆலோசனைக்குப்பின் இரண்டு சுழற்பந்தாளர்களை தில்லி அணி களம் இறக்கியது. இருவரும் சிறப்பாக பந்து வீசினர். நாணயச்சுண்டலில் வென்ற தில்லி, அசாமை ஆட அழைத்தது.அசாம் அணி சுரத்தின்றி ஆடியது. ரஜத்பட்டியாவும் சங்வானும் நான்கு விக்கெட்டுகளைப் பகிர்ந்துகொண்டனர். சுழற்பந்தாளர்கள் வருண் சூட் நான்கு விக்கெட்டுகளையும் நெகி இரண்டு விக்கெட்டுகளையும் எடுத்தனர். அசாம் 94 ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்தது.தில்லி அணி 20.2 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 96 ஓட்டங்களை எடுத்து வென்றது. சிகார் தவாண் 72 பந்துகளில் 42 ஓட்டங்கள் எடுத்து அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்றார்.ஹர்பஜன் ஆல்ரவுண்ட்ஹர்பஜனின் ஆல்ரவுண்ட் திறமையால் பஞ்சாப் வென்றது. மிரட்டும் இணைகளை மூன்று முறை பிரித்தும், ஆட்டம் இழக்காமல் 79 ஓட்டங்கள் எடுத்தும் ஹர்பஜன் பஞ்சாபை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். மகாராஷ்டிரா 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 186 ஓட்டங்கள் எடுத்தது. ஹர்பஜனுக்கு உதவியாக ராகுல் சர்மா இரண்டு விக்கெட்டுகள் எடுத்தார்.21 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 64 ஓட்டங்களுடன் பஞ்சாப் தத்தளித்தது. தருவர் கோலி (46) அணியை நிலைப்படுத்தினார். பின்னர் ஹர்பஜன் அடித்து நொறுக்கினார். பஞ்சாப் 48.2 ஓவர்களில் 192 ஓட்டங்கள் எடுத்து வென்றது.

Leave A Reply