ஹைதராபாத், மார்ச் 6-
வரிப் பிரச்சனையில் நிஜாம் குடும்பம் சிக்கித் தவிக்கிறது. 1995ம் ஆண்டு நிஜாம் குடும்பத்தின் ரூ.200 கோடி மதிப்பு நகைகளை இந்திய அரசு கையகப்படுத் தியது. அதில் இருந்து நிஜாம் குடும்பத்தினருக்கும் வருமான வரித்துறையின ருக்கும் கடும் பிரச்சனை நிலவி வருகிறது. நிஜாம் குடும்பம் ரூ.8.99 கோடி வரி பாக்கி வைத்தி ருப்பதாக கூறப்படும் விவ காரத்தில் இரு தரப்பின ருக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது.நிஜாம் குடும்ப நல வாழ்வு சங்கத்தின் தலைவ ரான நவாப் நஜாப் அலி கான் வருமான வரித்துறை யின் அலட்சியப்போக்கைக் கண்டு, வேதனையடைந் தார். மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, இப்பிரச் சனையில் தலையிட்ட பின் னரும், வருமான வரித்துறை பிரச்சனைக்கு தீர்வுகாண வில்லை.இதனால் மனம் வேத னை அடைந்துள்ள நவாப் குடும்ப உறுப்பினர்கள் வர விருக்கும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரின்போது, ஜந்தர் மந்தர் பகுதியில் தர்ணா போராட்டம் நடத் தத்திட்டமிட்டு உள்ளனர்.
நவாப் குடும்பத்தில் தற் போது 2 மகன்கள், 5 மகள் கள், 104 பேரக்குழந்தைகள் உள்ளனர். வருமான வரி பாக்கி மற்றும் சொத்து வரிக்கு, வட்டியுடன் ரூ.30.5 கோடியை செலுத்த வேண் டும் என வருமான வரித் துறை கூறி வருகிறது.கடந்த 1995ம் ஆண்டு நவாப் டிரஸ்டிகள் ரூ.15.45 கோடியை செலுத்தினர். அதேபோன்று ரூ.15.05 கோடியை நிலைத்த டெபா சிட்டாக ஹைதராபாத் ஸ்டேட் பாங்க்கில் வட்டிப் பகுதியாக ரூ.15.05 கோடி டெபாசிட் செய்யயப்பட் டது திரும்ப செலுத்துதல் தொகைக்கு பின்னர் இந்த டெபாசிட் தொகை ரூ.8.66 கோடி ஆனது. இந்தத் தொகை தொடர்பாக வருமான வரித்துறைக்கும் நவாப் குடும்பத்தினருக்கும் மோதல் நீடித்து வருகிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.