தாக்கல்புதுதில்லி: முறையான உரிமம் இல் லாதவகையில் துப்பாக்கிகளை வைத் திருந்த இருவரை லாக்கப்பில் வைத்து சித்ர வதை செய்ததாக அடையாளம் தெரியாத காவல்துறை அதிகாரிகள் மீது தில்லி காவல்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது.குற்றம் சாட்டப்பட்டவர்களான மோஹித் மற்றும் விகாஷ் ஆகியோரை பிப்ரவரி 16ம் தேதி கைது செய்த காவல் துறையினர் மறுநாள் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர்.
அங்கு அவர்கள் தங்க ளைக் காவல்துறையினர் கடுமையாகத் தாக்கியதாக மெட்ரோபாலிடன் நீதிபதி சுசீல் அனுஜ் தியாகியிடம் புகார் செய் தனர்.காவல்துறையினர் குடிபோதையில் இரக்கமில்லாமல் தாக்கினர் என்று குற்றம்சாட்டப்பட்டவர்கள் நீதிபதியிடம் தெரிவித்தனர். இவர்களை விசாரணைக்காக காவல் துறையினர் கோரியதை நிராகரித்த நீதிபதி, குற்றம் சாட்டப்பட்டவர்களை நீதிமன்றக் காவலில் வைக்குமாறு உத்தரவிட்டார். மேலும் அவர்களுக்கு மருத்துவப் பரி சோதனை அளிக்கப்பட வேண்டும் என்று திகார் சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இச்சம்பவம் குறித்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டுமென்று உத்தரவிட்டார். மேலும் இவ்விஷயம் குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணை யம் விசாரணை செய்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது தகுந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Leave A Reply