நிறுவனத்தை சீர்செய்யப் போகிறோம் என்று யாஹு நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரி ஸ்காட் தாம்ப்சன் அறிவித்துள்ளார். சீர்செய்வதின் முதல் அம்சமே ஊழியர்களை வெளியேற்றுவது மற்றும் இருக்கும் ஊழியர்கள் மீது கூடுதல் சுமையை ஏற்றுவது என்பதாகவே நிறுவனங்களைக் பொறுத்தவரை அமைந்துள்ளது. ஆயிரக்கணக்கான ஊழியர்களை யாஹு வெளியேற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிதாக ஊழியர்களை எடுத்துக் கொள்வது மற்றும் ஏற்கெனவே இருக்கும் ஊழியர்களுக்கு அதிக வேலைகளைக் கொடுப்பது போன்றவை மூலமாக சமாளிக்கவும் திட்டமிட்டுள்ளனர். இந்த மாற்றங்கள் மார்ச் மாத இறுதிக்கு நடைமுறைக்கு வரப் போகின்றன. ஏற்கெனவே ஏராளமான ஊழியர்கள் வேலையை விட்டு வீட்டுக்கு அனுப்பப்பட்ட நிலையில் தற்போது மொத்தம் 14 ஆயிரத்து 100 ஊழியர்கள் யாஹு நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

Leave a Reply

You must be logged in to post a comment.