அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழகம் நடத்திய எம்பிபிஎஸ் படிப்பிற்கான நுழைவுத் தேர்வில் பல்கலைக்கழக அளவில் ரேங்க் பெற்று எய்ம்ஸ் நிறுவனத்தில் முதலாமாண்டு சேர்ந்துள்ளார் அனில்குமார். ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த எளிய விவசாயியின் மகனான இவர் தலித் பிரிவைச் சேர்ந்தவர். முதலாமாண்டு தேர்வில் இவர் தேர்ச்சி பெற வில்லை. தேர்வு பெறத் தவறிய மாணவர்களுக்கு நடத்தப்படும் துணைத்தேர்விலும் வெற்றிபெற முடியாத நிலையில் கடந்த சனிக்கிழமையன்று இவர் தற்கொலை செய்துகொண்டு இறந்துள் ளார். இதற்குக் காரணம், தாய்மொழியில் பயின்ற இவரால் ஆங்கிலத்தில் நடத்தப்பட்ட பாடங் களை புரிந்து கொள்ளமுடியவில்லை. எய்ம்ஸ் நிறுவனத்தில் நடந்த கருத்தரங்குகள் மற்றும் கலந்துரையாடல்களில் தனது கருத்தை ஆங்கிலத்தில் கூறமுடியவில்லை. இதனால் தொடர்ச்சியாக பெயிலாக்கப்பட்ட இவர் தற் கொலை செய்துகொண்டு இறந்திருக்கிறார். தலித் மாணவர்கள் எய்ம்ஸ், ஐடிஐ, ஐடிஎம் போன்ற மத்திய அரசு நிறுவனங்களில் சேர்ந்த பிறகு தற்கொலை செய்துகொள்வது அவ்வப் போது நடந்துகொண்டுதான் இருக்கிறது. இது ஒரு சாதாரண செய்தியாக கடந்துபோய்விடு கிறது. எய்ம்ஸ் நிறுவனத்தில் பயிலும் தாழ்த்தப் பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு மொழிப்பயிற்சி உட்பட சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்படவேண்டும் என்று பல்வேறு குழுக் கள் வலியுறுத்தியுள்ளன. ஆனால் மத்திய அரசு, சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் இதை கண்டு கொள்ளாததன் விளைவு, தலித் மாணவர்களின் தற்கொலைப் பட்டியல் அதிகரித்துக்கொண்டே போகிறது. மத்திய அரசு உயர்கல்வி நிறுவனங்களில் பிற் படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கவேண்டும் என்று முடிவெடுக்கப்பட்ட போது இத்தகைய உயர்கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள், உயர்சாதி மாணவர் களை உசுப்பிவிட்டு போராடத் தூண்டியதாக தகவல்கள் வெளியாகின. சில குழுக்களின் அறிக்கைகளும் இதை உறுதிசெய்தன. இத் தகைய ஆசிரியர்களால் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் பாரபட்சமாக நடத்தப்படுவதாக வரும் தகவல்கள் அதிர்ச்சி யளிப்பதாக உள்ளன.2008ம் ஆண்டில் தேசிய தாழ்த்தப்பட் டோருக்கான ஆணையம் ஒரு குழு அமைத்து இதுகுறித்து ஆய்வு செய்தது. இந்தக் குழுவின் அறிக்கை, எய்ம்ஸ் நிறுவனத்தில் தலித் மாண வர்கள் பாரபட்சமாக நடத்தப்படுவதாகவும் அவர்களுக்கு எந்தவிதமான சிறப்புப் பயிற்சியும் அளிக்கப்படுவதில்லை என்று குற்றம் சாட் டியுள்ளது. தலித் மற்றும் பழங்குடி மாணவர் களுக்கு சிறப்புப் பிரிவு அமைக்கப்படவில்லை என்று 2006ம் ஆண்டு அமைக்கப்பட்ட தரோட் குழு கூறியுள்ளது. தனது பிரச்சனைகள் குறித்து தற்கொலை செய்துகொண்ட அனில்குமார், எய்ம்ஸ் இயக்குநரை சந்திக்க மூன்று முறை முயன்றபோதும் அவரால் முடியவில்லை. தில்லியில் மட்டுமல்ல தமிழகத் திலும்கூட இத்தகைய செய்திகள் அடிக்கடி வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அண்மை யில் மதுரை மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த மாணவர் படிப்பின் அழுத்தம் தாங்காமல் தற் கொலை செய்துகொண்டதாக செய்தி வெளியா னது. கொலைக்களமாகவும், தற்கொலை முனையாகவும் மாறிவரும் உயர்கல்வித்துறை குறித்து ஆழமான ஆய்வுகளும், தீர்வுகளும் தேவைப்படுகின்றன.

Leave A Reply

%d bloggers like this: