5 மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை செவ்வாயன்று நடந்தது. மாலை 7 மணிவரையிலான நிலவரத்தின்படி, இந்தியாவின் பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாதிகட்சி மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தை ஆளும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும், 3வது இடத்தை பாஜகவும் பிடித்துள்ளன. காங்கிரஸ் 4வது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.இந்த மாநிலத்தில் மொத்தமுள்ள 403 இடங்களில் சமாஜ்வாதி கட்சி 224 இடங்களில் (ஆட்சியமைக்க குறைந்தது 202 இடங்கள் தேவை) முன்னிலையில் உள்ளது. ஆளும் பகுஜன் சமாஜ் கட்சி 77 இடங்களிலும், பாஜக 49 இடங்களிலும், காங்கிரஸ் 39 இடங்களிலும் மட்டுமே முன்னிலைபெற்றன. மற்ற கட்சிகள், சுயேச்சைகள் 14 இடங்களைப் பிடித்துள்ளனர். இந்த மாநிலத்தில் கடந்த சட்டமன்றத் தேர்தலோடு ஒப்பிடு கையில் சமாஜ்வாதி கட்சி 127 இடங்களில் கூடுதலாக வெற்றி பெற்றுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி 129 இடங்களை இழந்துள்ளது. காங்கிரஸ் கூடுதலாக 7 இடங்களைப் பிடித்துள்ளது. பாஜக 2 இடங்களை இழந்துள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.