சென்னை, மார்ச், 6 -சாந்திதேவி ஜவஹர் மால் சந்தன் டே கேர் மற் றும் பரஸ்மால் ஸ்ரீஸ்ரீமால் டயாலிசிஸ் சென்டர் ஆகிய மருத்துவ சிகிச்சை வசதி கொண்ட மருத்துவ மனையை, அயனாவரத்தில் ரூ.8 கோடி முதலீட்டில் சென்னை ராஜஸ்தான் இளை ஞர் சங்கம் காஸ்மோ மற் றும் ஆர்.ஒய்.ஏ. காஸ்மோ ஃபவுண்டேஷன் அமைப்பு கள் நிறுவியுள்ளன.தமிழ்நாடு சட்டப் பேர வைத் தலைவர் டி.ஜெயக் குமார், மார்ச் 10 அன்று இம் மருத்துவ மையத்தினைத் திறந்து வைக்கவுள்ளார். இந் தப்புற நோயாளிகளுக்கான சிகிச்சை மற்றும் நோய் அறி சோதனை மையத்தின் மூலம் பொது மக்கள் குறைந்த கட்டணத்தில் மருத்துவ ஆலோசனை, நோய் அறி சோதனைகள், அவசர சிகிச்சை, இரத்தத்தை மாற் றும் டயாலிசிஸ் சேவை ஆகியவற்றைப் பெறலாம். இந்த மையத்தோடு இணைந்த மருந்தகத்தில், சிகிச்சை பெறும் முதல் மூன்று நாட்களுக்கு பொது மக்களுக்கு இலவசமாக மருந்துகள் வழங்கப்படும். மேலும் மருந்துகள் வேண்டு வோர் 15 சதவீத தள்ளுபடி விலையில் மருந்துகளைப் பெறலாம். இதே போன்று, பரஸ்மால் ஸ்ரீஸ்ரீமால் டயா லிசிஸ் மையத்தில் ரூ.400 என்ற சலுகைக் கட்டணத் தில் டயாலிசிஸ் சேவை அளிக்கப்படும்.இந்த மருத்துவ மையம், நவீன நோய் அறி கருவிக ளான அல்ட்ராசவுன்ட் கலர் டாப்ளர் ஸ்கேனர், ஈ.சி.ஜி போன்ற கருவிக ளைக் கொண்டுள்ளது. இம் மருத்துவ மையத்தின் முதல் மாடி பல துறை மருத்துவ ஆலோசனைப் பகுதியாகச் செயல்படும். இதன் இரண் டாம் தளத்தில் நோய் அறி சோதனைக்கூடம், குருதி மாற்று சிகிச்சைக்கான டயா லிசிஸ் மையம் ஆகியவை அமைய உள்ளன.

Leave a Reply

You must be logged in to post a comment.