புதுதில்லி, மார்ச் 5-
மாநிலங்களவையில் 58 இடங்களுக்கு மார்ச் 30ம் தேதி தேர்தல் நடைபெறு கிறது.மாநிலங்களவை உறுப்பி னர் பதவி தேர்தல் 2 ஆண்டுக ளுக்கு ஒருமுறை நடைபெறு கிறது. 15 மாநிலங்களில் 58 இடங்களுக்கு மார்ச் 30ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் சனிக்கிழமை அறிவித்தது.அன்றைய தினம் தேர்தல் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். எம் எல்ஏக்கள் அளித்த வாக்கு கள் எண்ணிக்கை, வாக்குப் பதிவு நடந்த மாலை 5 மணிக்கு நடைபெறும்.உத்தரப்பிரதேசத்தில் 10 இடங்களுக்கும் ஆந்திரா, பீகார், மகாராஷ்டிரா மாநிலங்களில் தலா 6 இடங்களுக்கும் மத்தி யப்பிரதேசம் மேற்குவங்கம் மாநிலங்களில் தலா 5 உறுப் பினர் பதவிகளுக்கும் குஜராத், கர்நாடகம் மாநிலங்களில் தலா 4 உறுப்பினர் பதவிகளுக் கும் ஒடிசா, ராஜஸ்தான் மாநி லங்களில் தலா 3 உறுப்பினர் பதவிகளுக்கும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் 2 இடங்களுக் கும் சத்தீஸ்கர், ஹரியானா, இமாசலப்பிரதேசம், உத்தர காண்ட், மாநிலங்களில் தலா ஒரு இடத்திற்கும் மாநிலங்கள வை உறுப்பினர் தேர்தல் நடைபெறுகிறது.
தேர்தல் அறிவிக்கை மார்ச் 12ம் தேதியும் மனுக்க ளை தாக்கல் செய்ய மார்ச் 19ம் தேதி என்றும் மார்ச் 20ம் தேதி மனுக்கள் ஆய்வு செய்யப்ப டும் என்றும் மார்ச் 22ம் தேதி மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் என்றும் தெரி விக்கப்பட் டுள்ளது.ஏப்ரல் 2 மற்றும் 3ம் தேதி களில் மாநிலங்களவை துணைத்தலைவர் ரகுமான் கான், எதிர்க்கட்சித்தலைவர் அருண்ஜெட்லி (பாஜக), மத் திய அமைச்சர்கள் முகுல்ராய், விலாஸ்ராவ் தேஷ்முக், முன் னாள் மத்திய அமைச்சர் நாரா யணராவ், ஐஎன்டியுசி தலை வர் சஞ்சீவ ரெட்டி, நடிகை ஹேமமாலினி ஆகியோர் பதவி இழக்கிறார்கள்.

Leave a Reply

You must be logged in to post a comment.