பத்தனம்திட்டா, மார்ச் 6-
திருவாங்கூர் மாவட்டம் பத்தனம்திட்டா மலைப் பகுதி கடும் தண்ணீர் தட்டுப்பாடு அபாயத்தில் சிக்கியுள்ளது.ஜனவரி மாதத் துவக்கத் தில் கோடைகாலம் துவங்கி யது. ஜனவரி மாதம் மத்தி யில் இருந்து மலைப் பகுதிகளான ரன்னி, சொன்னி, அடூர் ஆகிய இடங்களில் கிணறுகள், நீரோடைகள் வறண்டு போக துவங்கின. பம்பை, மணிமாலா மற்றும் அச்சன் கோவில் ஆறுகளில் சுட் டெரிக்கும் வெயில் காரண மாக நீர் அளவு வேகமாக குறைந்துள்ளது. பம்பை ஆற்று கரைப்பகுதியில் வசிக்கும் மக்கள், தங்கள் கிணறுகளில், போதிய தண்ணீர் இல்லாததால், அதனை ஆழப்படுத்தும் முயற்சியில் இறங்கி உள் ளனர்.வெயில் தாக்கத்தால் தண்ணீர் மட்டம் குறைந்த தால் பம்பை, மணிமாலா, அச்சன்கோவில் நீர் விநி யோகத் திட்டச்செயல்பாடு கள் கடுமையாக பாதிக் கப்பட்டுள்ளன.
பொது நீர்க்குழாய்களில் குடிநீர் பிடிப்பதற்கு, பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்து இருக்க வேண்டியுள்ளது. பொது குடிநீர் குழாய்கள் உள்ள கவியூர், களஞ்ஜிர், ரன்னி, சொன்னி பகுதிகளில் ஓரு பானைத் தண்ணீர் பெறுவதற்கும் காத்திருக்க வேண்டிய பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.குடிநீர் தட்டுப்பாடு கடு மையாக பாதித்த பகுதி களாக சித்தார், எலகுளம், நல்லூர், அட்டச்சக்கல் போன்ற இடங்கள் உள்ளன. பழங்குடியினரின் பகு திகளான அதிச்கிபுழா, குருநாதன் மன்னு பகுதிகள் கடும் தண்ணீர் தட்டுப்பாட் டில் சிக்கியுள்ளன. கேரளா வில் தென் மேற்கு பருவக் காற்று பெருமழையைக் கொண்டு வந்தபோதும் மழைநீரைத் தேக்கி வைப்ப தற்குரிய கட்டமைப்புகளில் பற்றாக்குறை உள்ளது. அத னால் மேடான பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற் படுவது இயல்பாகவே இருக் கிறது.

Leave A Reply

%d bloggers like this: