சென்னை, மார்ச், 6 -இந்தியாவில் மருத்துவ செலவு என்பது மிக அதிக மாக உள்ளது. இதனை குறைக்க மருத்துவமனை கள் முன்வரவேண்டும் என்று பிரபல மென்பொருள் நிறு வனமான காக்னிசென்ட் துணைத் தலைவர் லட்சுமி நாராயணன் கூறியுள்ளார்.சென்னை கோபாலபுரத் தில் செயல்படும் டாக்டர் மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு மையத்தின் மற்றொறு கிளை பழைய மகாபலிபுரம் சாலையில் காரப்பாக்கத்தில் திறக்கப்பட்டுள்ளது. இதனை திறந்துவைத்துப்பேசிய அவர், மக்கள் வாழ்க்கை முறை மாற்றத்தில் கவனம் செலுத்தினாலே போதும். அவர்களை எந்த நோயும் அண்டாது. நல்ல மருத்து வர்கள் உள்ளனர். நல்ல மருத்துவமனைகள் உள்ளன. நவீன கருவிகள் உள்ளன. ஆனால் அதற்கு அதிக செல வாகிறது. ஏழை எளிய மக்க ளுக்கு இந்த சிகிச்சைகள் கிடைக்க கட்டணம் குறைக் கப்படவேண்டும். சமூகத் தின் மீது நிறுவனங்களுக்கு அக்கறை இருக்கவேண்டும். எங்களது காக்னிசென்ட் நிறுவனம் அறக்கட்டளை நிறுவி மருத்துவமனைக ளுக்கு நவீன சாதனங்களை நன்கொடையாக அளிக்கி றது. இதுபோன்று பல நிறு வனங்கள் முன்வந்தால் மருத்துவ சிகிச்சை கட்ட ணங்கள் குறைய வாய்ப்பிருக் கிறது என்றார் அவர்.முன்னதாக பேசிய டாக் டர் மோகன், தமது மருத்துவமனையின் ஆய்வு பிரிவு நடத்திய அகில இந் திய ஆய்வில் தற்போது நாட் டில் 6 கோடியே 20 பேருக்கு நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்பு இருப்பது தெரிய வந்துணள்ளது. அதில் 77 விழுக் காட்டினருக்கு அடுத்த 2 முதல் 4 ஆண்டுகளுக்குள் நீரிழிவு நோய் வரும் என் றும் அவர் கூறினார்.எனவே தான் நீரிழிவு மருத்துவர்களின் பற்றாக் குறையை போக்க நீரிழிவு மருத்துவத்தில் சான்றிதழ் படிப்பை தமது மருத்துவ மனையின் கல்வி பிரிவு துவக்கியுள்ளது என்றும் இதுவரை 5ஆயிரம் பேர் பயிற்சி பெற்றுள்ளனர் என் றும் அவர் தெரிவித்தார். புதி தாக துவக்கப்பட்டுள்ள இந்த மையத்தில் டாக்டர் கள் விக்னேஷ், ஜெய்சன் ஜேக்கப் ஆகியோர் பொது மக்களுக்கு சிகிச்சை அளிக்க வுள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: