கிருஷ்ணகிரி, மார்ச் 6-
ஊத்தங்கரையில் சக்தி மிக்க குண்டு வெடித்து உடல் சிதறி ராணுவத்தில் பணியாற்றியவர் உயிரிழந் தார். தானே தயாரித்த குண் டுக்கு தன்னை பலி கொடுத் தவர் போலி சான்றிதழ் களை பயன்படுத்தி ராணு வத்தில் சேர்ந்துள்ளது தெரிய வந்துள்ளது.கிருஷ்ணகிரி மாவட் டம் ஊத்தங்கரை நகரின் மையப் பகுதியில் திங்க ளன்று (மார்ச் 5) மாலை டீக்கடை முன்பு சக்திமிக்க குண்டு வெடித்தது. இதில் ஒருவரது உடல் சிதறி சுமார் 200 மீட்டர் தூரம் வரை உறுப்புகள் விழுந்தன. டீக் கடையை நடத்தி வந்த சாந்த லட்சுமி (62) யும் காய மடைந்தார். டீ குடித்து விட்டு திரும்பிய இரண்டு இளைஞர்களில் ஓருவர் இந்த குண்டு வெடிப்பில் உடல் சிதறி இறந்து விட்ட தையும் ஓருவர் தப்பியிருக்க லாம் எனவும் சாந்தலட்சுமி காவல் துறையிடம் தெரி வித்தார்.
அந்த இளைஞர் கள் வந்த இரு சக்கர வாக னத்தை கைப்பற்றி விசாரித் ததில் வாகன பதிவு எண் போலி என தெரிய வந்தது.
எஞ்ஜின் எண் மூலம் வாகன உரிமையாளர் ஊத்தங்கரை வட்டத்திலுள்ள படத்தா னூர் கிராமத்தைச் சேர்ந்த மாதையன் என்பது தெரிய வந்தது. உயிரிழந்தவர் அவ ரது மைத்துனர் டி.சீனிவா சன் என்கிற சக்திவேல் (23). இவர் ராணுவத்தின் மெட் ராஸ் எஞ்ஜினியரிங் குரூப் ஏழாவது படைப்பிரிவில் சலவையாளராக நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பணி யில் சேர்ந்துள்ளார். அரு ணாச்சல பிரதேசம் தவாங் மாவட்டத்திலுள்ள தெங் காய் என்னுமிடத்தில் பணி புரிந்து வந்துள்ளார். இரண்டு மாத விடுப்பு முடிந்து அடுத்த இரண்டு நாட்களில் பணிக்கு திரும்பியிருக்க வேண்டும். அதற்குள் குண்டு வெடித்து சிதறி இறந்துள் ளார்.சீனிவாசனுடன் வந்தவர் அருகிலுள்ள ஆண்டியூர் கிராமத்தைச் சேர்ந்த ஜே. ராமமூரத்தி (18) என்பதை காவல் துறையினர் கண்டு பிடித்துள்ளனர்.
இவர் செல் போன் பழுது நீக்கும் கடை வைத்துள்ளார். செவ்வா யன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபி ஷேக் தீட்சித் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் செந்தில் குமார் வெடிகுண்டு கண்டறி தல் மற்றும் செயல் இழப்பு பிரிவு ஆய்வாளர் கே.கே. முகம்மது உள்ளிட்டோர் சீனிவாசனின் வீட்டில் சோதனையிட்டனர். அப் போது வெடிகுண்டு தயா ரிக்க பயன்படும் 5 டெட்ட னேட்டர்கள், பேட்டரிகள், மின்னணு மற்றும் மின் சாத னங்கள் உள்ளிட்ட 70 க்கும் மேற்பட்ட பொருட்களை கைப்பற்றினார்கள். இது போல் ராமமூர்த்தியின் வீட்டிலும் கடையிலும் சோதனை நடத்தி சில பொருட்களை கைப்பற்றி னார்கள். ஊத்தங்கரை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சீனிவா சனின் உடல் சிதைவுகள் சேலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று ராணுவத்தின் விசா ரணைக்காக வைக்கப்பட உள்ளது.வழக்கமாக ஆண்டு தோறும் 28 நாட்கள் விடு முறையில் சீனிவாசன் ஊருக்கு வந்து திரும்பி விடுவாராம். இம்முறை இரண்டு மாதங் கள் எதற்காக விடுப்பு எடுத்துக் கொண்டார்.
வெடி குண்டு தயாரித்து ஊத்தங்கரைக்கு எதற்காக கொண்டு வந்தார். வாகனத்தில் போலியான பதிவு எண் பொருத்தப்பட் டது எதற்காக அனைத்துக் கும் மேலாக போலி ஆவ ணங்கள் மூலம் ராணுவத் தில் சேர முடிந்தது எப்படி என்று பல்வேறு கேள்வி கள் இச்சம்பவத்தின் பின்னணி யில் எழுந்துள்ளன.போலி சான்றிதழ்கள்: சீனிவாசனின் வீட்டில் அவனது அறையிலிருந்து கிடைத்த பள்ளி சான்றி தழ்களில் அவனது பெயர் டி.சக்திவேல் என்று உள் ளது. ஆனால் ராணுவத்தில் சேரும் போது தனது பெயரை டி.சக்திவேல் என்று போலி ஆவணங்கள் தயா ரித்து கொடுத்துள்ளார். வீட் டில் இருந்த ராணுவ சீருடை யிலும் டி.சீனிவாசன் என்றே பொறிக்கப்பட்டிருந்தது. பிறந்த தேதியிலும் இவ்விரு சான்றிதழ்களுக்குமிடையே ஓராண்டு இடைவெளி உள் ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.