அம்பத்தூர், மார்ச், 6 -வியாசர்பாடி மகாகவி பாரதி நகர் அம்பேத்கர் கல்லூரி அருகே முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பி னர் செங்கை சிவத்திற்கு சொந்தமான பெட்ரோல் பங்க் உள்ளது. இதில் 10க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். செவ்வாய்க்கிழமை காலை திடீரென ஒரு டேங்கில் தீ விபத்து ஏற்பட்டது. இதைப் பார்த்த ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் அலறி யடித்துக் கொண்டு ஓடி னார்கள்.வியாசர்பாடி மற் றும் பெரம்பூர் போன்ற இடங் களில் இருந்து தீயணைப்பு வீரர்கள் வந்து அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். குறிப்பிட்ட நேரத்தில் தீ அணைக்கப் பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. பெட் ரோல் பங்க் அருகே திடீர் நகர், சாலமா நகர் உள்ளது. இங்கு ஆயிரத்திற்கும் மேற் பட்ட குடிசை வீடுகள் உள் ளது.ஆபத்தான நிலையில் உள்ள பெட்ரோல் பங்கை அகற்றக்கோரி ஆயிரத்திற் கும் மேற்பட்ட பொது மக் கள் சாலை மறியலில் ஈடு பட்டனர். இதையறிந்த மகா கவி பாரதிநகர் காவல் துறை யினர் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டுள் ளவர்களிடம், சம்பந்தப் பட்ட அதிகாரிகளுடன் பேசி விரைவில் நடவ டிக்கை எடுக்கிறோம் என்று உறுதியளித்தனர். பின்னர் பொதுமக்கள் சாலை மறி யலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் 1 மணி நேரத்திற் கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.கொடுங்கையூர் விநாயகர் கோவிலில் உண்டியல் பணம் கொள்ளைபெரம்பூர், மார்ச். 6 -கொடுங்கையூர் வெங்க டேஸ்வரா நகர் 1-வது தெரு வில் செல்வ விநாயகர் கோவில் உள்ளது. 200 ஆண்டு கள் பழமை வாய்ந்த இந்த கோவில் தற்போது புனர மைக்கப்பட்டு திருப்பணி நடைபெற்று வருகிறது. கோவிலில் நவக்கிரக சன் னதி அமைக்கப்படுகிறது. திங்களன்று பணி முடிந்து ஊழியர்கள் சென்று விட்டனர். கோவில் அர்ச்ச கரும் பூஜையை முடித்து கோவிலை பூட்டிச் சென்று விட்டார். செவ்வாயன்று காலை அர்ச்சகர் சுப்பிர மணி, நிர்வாகி கணேசன் ஆகியோர் கோவிலுக்கு வந்தனர். அப்போது இரும்பு கேட் பூட்டு உடைக்கப் பட்டு இருந்தது. மேலும் விநாயகருக்கு எதிரே இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தது.அதிர்ச்சி அடைந்தவர் கள் கொடுங்கையூர் காவல் துறையில் புகார் செய்தார். கோவில் உண்டியல் 4 மாத மாக திறக்கப்படவில்லை. இதனால் ரூ.8 ஆயிரம் வரை கொள்ளை போய் இருக்க லாம் என கருதப்படுகிறது. காவல் உதவி ஆணையர் கோ.வி. மனோகரன், ஆய்வா ளர் சிவசங்கரன் ஆகியோர் கொள்ளை நடந்த இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Leave a Reply

You must be logged in to post a comment.