தினமும் மனித குலம் வாழ்வதற் கான அடிப்படை வேலைகளான உணவு உற்பத்தி, குழந்தைகள் மற்றும் குடும்பப் பராமரிப்பு என பெண்கள் செய்யும் அனைத்துப் பணிகளும் பொருளாதார உற்பத்திக்கு உதவாத பணிகளாக பார்க் கப்படுகின்றன. இந்த பணிகளுக்கு அப் பாற்பட்டு கூடுதலாக, வெளியே கூலிக் காக பெண்கள் வேலை செய்யும் போது தான் அவர்கள் உழைக்கும் பெண்கள் என்று சமூகத்தால் அழைக்கப்படுகின் றனர். உண்மையில் குடும்பம் என்பதே முதலாளித்துவ சமுதாயத்தால் தொழி லாளிகளை தினம் தினம் புதுப்பித்து, மறுநாள் சுரண்டுவதற்காக ஏற்படுத்தப் பட்ட அமைப்பு எனும் போது, ஒரு பெண் அந்த குடும்பத்தைப் பராமரிக்க செய்யும் இந்த வேலைகள் இல்லாமல், மறு நாளைய தொழிலாளி வர்க்க உழைப்பும், சுரண்டலும், முதலாளிகளின் இலாப மும் எப்படி வரும் என்பது தான் சாமானி யர்களின் மனதிலே எழுப்பப்பட வேண் டிய கேள்வி. எனவே, குடும்பப் பராமரிப் பில் ஈடுபடும் பெண்களின் உழைப்பை ஒன்றுமில்லாததாக எடுக்க முடியாது என்பதோடு, மறு பொருளாதார சுழற் சிக்கு அடிப்படையான இந்த பணி களுக்கு உரிய மதிப்பு வழங்கப்பட வேண் டும் என்பதும் நாம் உணர வேண்டிய ஒன்று. இந்த விழிப்புணர்வினை நமது பெண்கள் மத்தியிலேயே கூட ஏற்படுத்த வேண்டிய நிலை தான் இன்றுள்ளது. உழைப்புச் சுரண்டல்நமது நாட்டில் பெண்கள் பாலின ரீதி யாகவும், வர்க்க ரீதியாகவும், தாங்கள் சார்ந்துள்ள சாதியடுக்குகள் சார்ந்தும் மும்முனை தாக்குதல்களை சந்தித்து வருகின்றனர் என்பது கண்கூடு. அதி லும் பொருளாதார ரீதியாக பின் தங்கி யுள்ள நிலையில் பெண்கள் சந்திக்கும் அடக்கு முறைகளும், பாலியல் ரீதியான துன்புறுத்தல்களும் அதிகம். அவர்கள் முதலாளிகளால் இலாபம் ஈட்டும் கரு விகளாக, போகப் பொருட்களாகப் பார்க் கப்படுகின்றனர். சம வேலைக்கு சம கூலி வழங்கப்படுவதில்லை. பெரும் பான்மையான இடங்களில் சம்பள உயர் வுக்கோ அல்லது பதவி உயர்வுக்கோ வாய்ப்புகளே இருப்பதில்லை. வரை யறுக்கப்பட்ட வேலை நேரமோ அல்லது தொழிலாளர் நலச் சட்டங்களோ பெண் கள் அதிகம் பணி செய்யும் இடங்களில் அமலாக்கப்படுவதில்லை. அமைப்பு சார்ந்த துறையை விட நமது நாட்டில் 96 சதமானம் உள்ள அமைப்பு சாரா துறை யில்தான் பெண்கள் அதிகமாக பணிய மர்த்தப்படுகின்றனர். “அமர்த்து, துரத்து” என்ற அடிப்படையிலும், தினக் கூலிக ளாகவும் அவர்களது உழைப்பை சுரண் டுவது அதிகமாகிப் போயுள்ளது. இன் னும் சொல்லப் போனால், குத்தகைக்கு எடுக்கப்பட்ட அடிமைகள் போன்று இன்றும் இளம் பெண்கள் பஞ்சாலை களில் அடைக்கப்படுகின்றனர். அவர் களது உழைப்பு உறிஞ்சி எடுக்கப்படு கிறது. மன ரீதியான, உடல் ரீதியான அனைத்து பாலியல் வன்முறைகளுக் கும் ஆளாக்கப்படுகின்றனர். வீடு சார்ந்த தொழில்களில் பெண்கள் இன்று பெண்கள் பல வீடு சார்ந்த தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். என்ன கனவோடு இந்த வீடு சார்ந்த தொழில்களில் அவர்கள் ஈடுபடுகின் றனர் என்றால், குடும்பத்தையும் கவ னித்துக்கொண்டு, வீட்டில் இருந்த படியே வேலை செய்து பொருளாதாரத் தையும் தேடலாம் என்பதால்தான். இதில் பல்வேறு தொழில்கள் அடங்கும். இப்படி வீடு சார்ந்த தொழில்களில் ஈடு படும் பெண்களின் நிலைமை இன்னும் பரிதாபகரமானது. இவர்களுக்கு வரை யறுக்கப்பட்ட வேலை நேரம் என்பதோ, சமூகப் பாதுகாப்பு திட்டங்களோ அல் லது பணிமூப்பிற்கான ஆதாயங்களோ வழங்கப்படுவதில்லை. இன்னும் சொல் லப் போனால், இவர்கள் தொழில் சார்ந்த பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றனர். குடும்பம் மற்றும் இந்த அதிகப்படியான நேரம், காலம் இல்லா வேலையின் கார ணமாக ஏற்படும் மனப்பிறழ்வு போன் றவற்றிற்கும் இந்தப் பெண்கள் ஆளா கின்றனர். பீடித் தொழில் உதாரணமாக, திருநெல்வேலி மாவட் டத்தை எடுத்துக் கொண்டால், சுமார் 4 லட்சம் பீடித் தொழிலாளர்கள் இருக் கின்றனர். இவர்களில் 3.5 லட்சம் பேர் பெண்கள். பி.எஃப் உட்பட பிற சமூக நல உதவிகள் பெறக் கூடியவர்கள் 2 லட்சம் பேர் தான். இவர்களில் ஒரு பகுதியினர் மட்டும் தான் தொழிற்சங்க ரீதியாக அணி திரண்டுள்ளனர். இருந்தபோதும் தொழிற்சங்கங்கள் தொடர்ந்து போராடி யதன் காரணமாக இவர்களது இந்தத் தொழில் – முறைசாராத் தொழில் என்ற நிலை மாறியுள்ளது. சட்டப்படியான போனஸ் 8.33 சதமானம், விடுப்புச் சம் பளம் 8 சதமானம், பி.எஃப் பிடித்தம், பிர சவ கால விடுப்பு மற்றும் சம்பளம், சர் வீஸ் கார்டு, லாக் புக், குறைந்தபட்ச ஊதியமான 1000 பீடிக்கு ரூ.95, பஞ்சப் படி 19.24 என அனைத்தும் உத்தரவாதப் படுத்தப்பட்டுள்ளன. ஆனாலும், கிராமப் புறங்களில் உள்ள தொழிலாளிகளுக்கு பி.எஃப் பிடிக்கப்படுவதில்லை. உண் மையில் இவர்கள் அத்தக் கூலிகளாக, தினசரி சம்பளம் பெறுபவர்களாக, போனஸ் மற்றும் விடுப்புச் சம்பளம் போன்ற சலுகைகள் பெறாதவர்களாக உள்ளனர். இது ஒரு புறம் என்றால், இவர்க ளுக்கு வழங்கப்படும் மூலப்பொருட்க ளான புகையிலை பொடி மற்றும் இலை ஆகியவை தரமானதாக, சரியான அள வில் வழங்கப்படுவதில்லை. 1000 பீடி சுற்ற 500கிராம் இலையும், 200கிராம் பொடியும் வழங்கப்படும். ஆனால் இது 800 பீடிக்குத் தான் போதுமானதாக இருக்கும் என்பதால், இந்தப் பெண்கள் வெளி மார்க்கெட்டில் இருந்து மீதமுள்ள 200 பீடிக்கான பொடியையும் இலையை யும் ரூ.25 செலவழித்து வாங்க வேண்டிய நிர்ப்பந்தம் எழுகிறது. இதனால் அவர் களது சம்பளத்தில்(95-25=70) 25 ரூபாய் துண்டு விழுகிறது. இவர்களால் இரவு 2 மணி வரை விழித்து, அதிகாலை 5 மணிக்கு எழுந்து என்று அளவுக்கதிக மாக உழைத்தாலும் அதிகபட்சம் ஒரு நாளைக்கு 1500 பீடி வரையில் தான் சுற்ற முடியும். அதிலும் பீடிக் கம்பெனிகளில் கல்லாவில் உட்கார்ந்து கொண்டு சில ஆண்கள், பெண்களிடம் பாலியல் ரீதி யான சீண்டல்களை பல இடங்களில் செய்வதுண்டு. அப்போது வெளியில் சொல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல், அவமானம் தாங்காமல் பெண்கள் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வுகளும் அரங்கேறியுள்ளன. அதை விட இந்த பெண்களுக்கு என்று கம் பெனியில் நிர்ணயிக்கப்பட்ட கால நேரத் திற்குள் கொண்டு செல்லவில்லையென் றால், அந்த நாளின் கணக்கில் அந்த பீடி கள் எடுத்துக்கொள்ளப்படாது என்ப தால், அந்த பெண்கள் கம்பெனிக்குப் போகும் வழியிலேயே பீடிகளை கட்டிக் கொண்டும், அடுக்கிக்கொண்டும் செல் வதை பார்க்கும் போது, அவர்களது தசாவதானி திறமையை வியப்பதா அல்லது அவர்களது வேதனையை பார்த்து நொந்து போவதா என்ற நிலை நமக்குள் எழும். இவர்களை பல்வேறு நோய்களும் தாக்குகிறது என்பது இன் னும் வேதனையான செய்தி. இந்த பெண் கள் பெரும்பாலும் காச நோயால் கண் டிப்பாக தாக்கப்படுகின்றனர். நோயின் தீவிரம் சிலருக்குக் கூடுதலாகவும், சில ருக்குக் குறைவாகவும் உள்ளது என்று உச்சநீதி மன்றத்தால் நிர்ணயிக்கப்பட்ட மருத்துவக் குழுவே கண்டறிந்து கூறி யுள்ளது. இதுவும் வீடு சார்ந்த தொழில் தானே. இதிலும் பெண்களின் உழைப்பு அதிகமாகச் சுரண்டப்படுகிறது. எனவே, உழைக்கும் வர்க்கத்தின் பெரும்பகுதி பெண்களாக உள்ள நிலை மையில் அவர்களை உழைப்புச் சுரண் டலில் இருந்து வெளிக்கொணர வேண் டியுள்ளது. பொதுவான போராட்டங் களில் பெருமளவில் பெண்கள் ஈடுபட வேண்டியது அவசியமாகிறது. இந்த புரி தலுடன் இந்த சர்வதேச மகளிர் தினத்தில் அனைத்து உழைக்கும் பெண்களையும் அணிதிரட்டுவோம்.

Leave A Reply

%d bloggers like this: