புதுச்சேரி, மார்ச் 6-
மருத்துவக் கல்லூரியில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களை மீண்டும் பணி யில் அமர்த்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி புதுச்சேரி அரசை வலி யுறுத்தியுள்ளது.மார்க்சிஸ்ட் கட்சியின் பிரதேச செயற்குழு கூட்டம் செயற்குழு உறுப்பினர் ராமச்சந்திரன் தலைமை யில் நடைபெற்றது. கூட்டத் தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:புதுச்சேரி அரசு மருத் துவக் கல்லூரியில் வேலை வாய்ப்பகம் மூலம் பணிக்கு அமர்த்தப்பட்ட 137 ஊழி யர்களை அரசு நிர்வாகம் பணிநீக்கம் செய்துள்ளது கண்டனத்திற்குரியதாகும். பணிநீக்கம் செய்யப்பட்ட மருத்துவக் கல்லூரியின் ஊழியர்களை மீண்டும் பணியில் அமர்த்திட வேண் டும்.
அதேபோல் கடந்த காங் கிரஸ் ஆட்சி காலத்தில் 4 ஆயிரம் பேர் அரசுத்துறை, தன்னாட்சி, கூட்டுறவு நிறு வனங்களில் முறைகேடான முறையில் பணியில் திணிக் கப்பட்டார்கள். தற்போ துள்ள என்.ஆர் காங்கிரஸ் ஆட்சியில் நீதிமன்ற உத்த ரவை காரணம் காட்டி இந்த 4 ஆயிரம் ஊழியர்களும் வெளியேற்றப்பட்டுள்ளனர். ஆனால் பான்லே, அரசு பல் மருத்துவக்கல்லூரி, பிப்டிக், அரசு வேளாண் பண்ணை என பல அரசு சார்பு நிறுவனங்களில் கொள் ளைப்புற வழியாக மீண்டும் பணி திணிப்பை தற்போ தைய என்.ஆர். அரசு செய்து வருவது கவலை அளிப்ப தாகும். ஏற்கனவே பணி செய்து வரும் ஊழியர் களுக்கு பல மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை.
எனவே தான் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த அதே நிலைமை என்.ஆர் காங்கி ரஸ் ஆட்சியிலும் தொடர் கிறது.புதுச்சேரி இளைஞர் களை வேலை வாய்ப்பகம் மூலம் பணிக்கு அமர்த்த வும், சட்டக்கூலியை வழங் கவும், தாழ்த்தப்பட்ட, பிற் படுத்தப்பட்ட மக்களுக் கான இடஓதுக்கீடு வழங்க வும் முன் வரவேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது.இவ்வாறு தீர்மானங்கள் குறித்து கட்சியின் பிரதேச செயலாளர் வெ.பெருமாள் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: