புதுச்சேரி, மார்ச் 6-
கசாப்புகாரன்தோப் பில் குடியிருந்த மக்களுக்கே மனைப்பட்டா வழங்க வேண்டும் என்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புதுச்சேரி ஆட்சியரிடம் வலியுறுத்தியுள்ளது.புதுச்சேரி முத்தியாள் பேட்டை அடுத்து சோலை நகரில் உள்ள கசாப்புகாரன் தோப்பில் கடந்த 10 வரு டங்களாக 50க்கும் மேற் பட்ட குடும்பங்கள் குடிசை வீடுகளை கட்டி வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் கடந்த 2008 ஆம் ஆண்டு மர்மமான முறையில் இந்த குடிசைகள் தீயில் எரிந்தன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் மனைப்பட்டா வாங்கி தருகிறேன் என்று உறுதியளித்துள்ளார். ஆனால், இதுநாள்வரை மனைப்பட்டா வாங்கி கொடுக்கவில்லை. இந்நிலையில் இவ் விடத்தை சொந்தம் கொண் டாடும் தனி நபர் இவ்விடத் தில் குடியிருக்கும் மக்களை காலிசெய்ய அடியாட் களை வைத்து மிரட்டுவ தாக தெரிகிறது.பாதிக்கப்பட்ட மக்கள் மார்க்சிஸ்ட் கட்சியின் பிர தேச செயலாளர் வெ.பெரு மாள், செயற்குழு உறுப்பி னர்கள் தா.முருகன், ராஜாங் கம், நகரகமிட்டி செயலா ளர் பிரபுராஜ், முத்தியாள் பேட்டை கிளை செயலா ளர் சரவணன் ஆகியோர் மாவட்ட உதவி ஆட்சியர் வின்சென்ட்ராயரை சந்தித்து மனு அளித்தனர்.மேலும் கசாப்புகாரன் தோப்பில் குடியிருக்கும் மக்களுக்கே மனைப் பட்டா வழங்க வேண்டும். அது வரை அவ்விடத்தை யாரும் விற்கவோ, வாங் கவோ அனுமதியளிக்க கூடாது என்று வலியுறுத் தினர். மனுவை பெற்றுக் கொண்ட உதவி ஆட்சியர் உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

Leave A Reply

%d bloggers like this: