: பீகார் மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு குறித்து கொண்டு வரப்பட்ட ஒத்திவைப்புத் தீர்மானத்திற்கு சபாநாயகர் உதய் நாராயண் சௌத்திரி அனுமதி அளிக் காததால் பீகார் சட்டசபையில் பெரும் அமளி ஏற்பட்டது.கேள்வி நேரம் துவங்கியவுடன் ராஷ்ட் ரீய ஜனதாதள உறுப்பினர் சாம்ராட் சௌத்திரி பீகாரில் சட்டம்-ஒழுங்கு மிகவும் மோசமாக உள்ளது. எனவே ஒத்தி வைப்புத் தீர்மானத்தில் இதுகுறித்து விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத் தினார்.
சபாநாயகர் மறுத்த ஒத்திவைப்புத் தீர்மானத்தை அனுமதிக்க மறுத்தார்.மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த பிரச் சனையாக இருப்பதால், உடனடியாக தீர் மானத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் அப்துல் பாரி சித்திக் வலியுறுத்தினார். இதை யடுத்து ராஷ்ட்ரீய ஜனதாதள உறுப்பினர் கள் போஸ்டர்கள் மற்றும் செய்தித் தாள்களைக் கையில் ஏந்தியவாறு அவை யின் மையப்பகுதிக்குச் சென்று கோஷமிட் டனர். சபாநாயகரின் கருத்தை ஏற்றுக் கொள்ளாத எதிர்க்கட்சியினரின் நடத் தையை நீர்வளத்துறை அமைச்சர் விஜய் குமார் சௌத்திரி கண்டனம் செய்தார்
. மேலும் அரசு பள்ளிகளில் நடைபெற்ற போலி மாணவர் சேர்க்கை ஊழலைக் கண்டித்து எதிர்க்கட்சியினர் கோஷமிட் டனர். அப்படி ஒரு ஊழல் நடக்கவில்லை என்று முதல்வர் நிதீஷ் குமார் தெரி வித்தார்.மாணவர் சேர்க்கைப் பட்டியலுக்கும் வருகைப்பதிவேட்டிற்கும் உள்ள வேறு பாடு விரைவில் சரிசெய்யப்படும் என்று முதல்வர் தெரிவித்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.