புதுதில்லி, மார்ச் 6- உத்தரப் பிரதேச சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியடைந்ததற்கு பொறுப் பேற்பதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உத்தரப் பிரதேசத்தில் நான் தான் முன் நின்று பிரச்சாரம் செய்தேன். அதனால் காங்கிர சின் தோல்விக்கு பொறுப்பேற்கிறேன். தோல்வி யும் எனக்கு ஒரு நல்ல பாடமாக அமைந் துள்ளது.
இந்த மாநிலத்தில் கட்சியின் அடிப் படையே பலவீனமாக உள்ளது. நாங்கள் தோல் வியடைந்தாலும் பிரச்சாரத்தின்போது கொடுத்த வாக்குறுதிகளை நிச்சயம் நிறை வேற்றுவோம் என்றார்.செய்தியாளர்கள் மேலும் கேள்வி கேட்க முயன்றபோது தனக்கே உரிய புன்னகையை உதிர்த்துவிட்டு சென்றுவிட்டார்.

Leave A Reply

%d bloggers like this: